»   »  கபாலிடா, நெருப்புடா, வெள்ளிடா: முத்தூட் நிறுவனத்திற்கு மகிழ்ச்சிடா

கபாலிடா, நெருப்புடா, வெள்ளிடா: முத்தூட் நிறுவனத்திற்கு மகிழ்ச்சிடா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி பட புண்ணியத்தால் முத்தூட் பின்கார்ப் நிறுவனம் 165 கிலோ வெள்ளியை விற்பனை செய்துள்ளது.

கபாலி படம் ரிலீஸாகி அது ஒருபக்கம் வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் கபாலி பட விளம்பரத்திற்காக தயாரிப்பாளர் தாணு முத்தூட் பின்கார்ப் நிறுவனத்துடன் கைகோர்த்தார். அந்நிறுவனம் கபாலி ரஜினியின் உருவம் பதித்த வெள்ளிக் காசுகளை விற்பனை செய்தது.

Kabali da: Muthoot Fincorp Magizhchi da

ராசியான சூப்பர் ஸ்டார் வெள்ளிக் காசு என்று அறிமுகப்படுத்தி, ராசியான சூப்பர் ஸ்டார் காசை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள் என்று விளம்பரம் செய்தது. 5 கிராம்(ரூ.350), 10 கிராம்(ரூ.700), 20 கிராம்(ரூ.1,400) மற்றும் 10 கிராம் டாலர்(ரூ.700) நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த வெள்ளிக்காசு விற்பனை குறித்து டிவி மற்றும் டிஜிட்டல் மீடியாவிலும் விளம்பரம் செய்யப்பட்டது. 20 நாட்கள் விளம்பரப்படுத்தியபோது 165 கிலோ வெள்ளி விற்பனையாகியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபாலி காய்ச்சல் பரவிய நேரத்தில் வெளியான இந்த வெள்ளிக்காசுகள் அமோகமாக விற்றுத் தீர்ந்துள்ளன.

Read more about: kabali, கபாலி
English summary
Thanks to Kabali fever, Muthoot Fincorp has sold 165 kilograms of silver.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil