»   »  கபாலி... நீக்கப்பட்ட காட்சிகள் யுட்யூபில் ரிலீஸ்... ரசிகர்கள் வரவேற்பு!

கபாலி... நீக்கப்பட்ட காட்சிகள் யுட்யூபில் ரிலீஸ்... ரசிகர்கள் வரவேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி படம் வெளியாகும் நாட்கள் அவரது ரசிகர்களுக்கு திருவிழா காலம். கொண்டாடித் தீர்ப்பார்கள். இதை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகப் பார்த்து வருகிறது தமிழகம். குறிப்பாக 90களிலிருந்து இந்த கொண்டாட்டத்துக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன மீடியாக்கள்.

Kabali deleted scenes released

இப்போது அவரது படங்களில் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிடுவது ஒரு ட்ரெண்டாகி வருகிறது. அருணாச்சலம் படத்திலிருந்து ஆரம்பமானது இந்த ட்ரெண்ட்.


சந்திரமுகி, சிவாஜி படங்களில் நீக்கப்பட்ட காட்சிகளை தனி சிடியாகவே வெளியிட்டது நினைவிருக்கலாம்.இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தில் நீக்கப்பட்ட சில காட்சிகளை, படம் வெளியாகி 160 நாட்கள் கடந்த நிலையில் வெளியிட்டுள்ளனர்.


மொதம் 5 காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இந்த 5 காட்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 'அனைத்து காட்சிகளுமே நன்றாக உள்ளது. இவற்றையும் படத்தில் வைத்திருக்கலாமே' என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
Kalaipuli Thaanu, producer of Rajinikanth's Kabali has released the deleted scenes from the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil