»   »  கபாலி... உள்ளூர் லெவல் இல்ல... இப்போ உலக லெவல்!

கபாலி... உள்ளூர் லெவல் இல்ல... இப்போ உலக லெவல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெளியான 6 நாட்களில் 13 மில்லியன் பார்வைகள், 3.33 லட்சம் விருப்பங்கள் என திரையுலகையே புரட்டிப் போட்டிருக்கிறது ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் டீசர் சாதனை.

இதுவரை தமிழ் சினிமாவில் இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்த இந்தப் படம் அடுத்து இந்திய அளவில் கான்கள், குமார்கள் நடித்த படங்களின் ரெகார்டுகளையும் தகர்த்துவிட்டது.


அடுத்து சர்வதேச சினிமாக்கள்தான். ஏற்கெனவே ஆசிய - ஐரோப்பிய சினிமாக்களில் ஆன்லைன் சாதனையில் முதலிடத்தில் இருந்த கபாலி டீசர், இப்போது உலக அளவில் ஜேம்ஸ்பாண்ட், ஸ்டார் வார்ஸ், ஜூராசிக் வேர்ல்டு மற்றும் அவெஞ்சர்ஸ் படங்களின் டீசர்களின் சாதனைகளுக்கு இணையாக வர ஆரம்பித்துள்ளது.


ஸ்டார் வார்ஸ்

ஸ்டார் வார்ஸ்

உலக அளவில் அதிக விருப்பங்களை - லைக்குகள் - பெற்று முதலிடத்தில் உள்ளது ஸ்டார் வார்ஸ். மொத்தம் 6.63 லட்சம் லைக்குகள் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளன, கடந்த 7 மாதங்களில்.


அவெஞ்சர்ஸ்

அவெஞ்சர்ஸ்

இந்தப் படத்துக்கு அடுத்து அதிக லைக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது தி அவெஞ்சர்ஸ். இந்தப் படத்துக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 5.12 லட்சம் லைக்குகள் கிடைத்திருந்தன.


உலகளவில் கபாலி

உலகளவில் கபாலி

இப்போது மூன்றாம் இடத்துக்கு வந்திருக்கிறது ரஜினியின் கபாலி. அதாவது ஒரு தமிழ்ப் படத்தின் டீசர் வெளியான 6 நாட்களில் 13 லட்சம் பார்வைகள் மற்றும் 3.55 லட்சம் லைக்குகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.


ஜூராசிக் வேர்ல்ட்

ஜூராசிக் வேர்ல்ட்

இதற்கடுத்த இடம்தான் ஜூராஸிக் வேர்ல்ட் படத்துக்குக் கிடைத்துள்ளது, இந்தப் படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளில் 3.05 லட்சம் விருப்பங்களைப் பெற்றிருந்தது.


English summary
Rajinikanth starrer Kabali teaser has set a new record for any Indian movie in world level and placed top 3 among the international movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil