»   »  உலகெங்கும் கபாலி... நாளை முதல்.. முதல் காட்சி எங்கே?.. ஒரு 'குவிக்' ரிப்போர்ட்!

உலகெங்கும் கபாலி... நாளை முதல்.. முதல் காட்சி எங்கே?.. ஒரு 'குவிக்' ரிப்போர்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் முழுவதும் கபாலி ஜூரம் உச்சத்தைத் தொட்டுள்ளது. தமிழ் பேசும் மக்கள் இருக்கும் இடமெல்லாம் கபாலி குறித்த பேச்சுதான் (ஆதரவாகவோ அல்லது எதிராகவோ).

இந்த நிலையில் கபாலி முதன் முதலாக எங்கு திரையிடப்படவுள்ளது என்ற பெரும் ஆர்வமும், எதிர்பார்ப்பும் அனைவரின் மத்தியிலும் உள்ளது. அதுகுறித்து ஒரு மின்னல் பார்வை இதோ...

Kabali FDFS list
 • முதல் பிரீமியர் ஷோ அமெரிக்காவில் போடப்பட்டு விட்டது. இதை ரஜினி காந்த்தும் பார்த்து முடித்து விட்டார்.
 • ரசிகர்களுக்கான முதல் ஷோ என்றால் அது மலேசியாவில்தான் போடப்படவுள்ளது.
 • இந்திய நேரப்படி இன்று மாலை 6. 30 மணிக்கு (அங்கு இரவு 9 ) ரசிகர்களுக்கான முதல் ஷோ மலேசியாவில் திரையிடப்படவுள்ளது.
 • இந்த ஷோவைப் பார்க்க பெருமளவிலான வெளிநாட்டு ரசிகர்கள் புக் செய்து காத்துள்ளனராம்.
 • அமெரிக்காவில் 40 நகரங்களில் பிரீமியர் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
 • இன்று இரவு இந்த பிரீமியர் காட்சிகள் திரையிடப்படவுள்ளன.
 • அமெரிக்காவில் ஆங்கிலம் அல்லாத பிற மொழிப் படத்துக்கு இவ்வளவு அதிக பிரீமியர் ஷோ நடப்பது இப்போதுதானாம்.
 • ஜேம்ஸ்பாண்ட், ஸ்பைடர் மேன் படங்களுக்கு அடுத்து கபாலிக்குத்தான் அதிக அளவிலான பிரீமியர் ஷோ நடக்கவுள்ளதாம்.
 • அமெரிக்காவில் பிரீமியர் ஷோவுக்கு மட்டுமே கிட்டத்தட்ட ரூ. 1 கோடி அளவுக்கு வசூலாகி விட்டதாம்.
 • முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வரும் ஒட்டுமொத்த வசூலுக்கு நிகரானதாம் இது.
 • இந்தியாவில் ஒவ்வொரு ஊரிலும் ஒரு நேரத்தில் முதல் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
 • தமிழகத்தில் மதுரையில்தான் முதல் காட்சி அரங்கேறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 • சென்னையில் நாளை அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படவுள்ளது.

English summary
Kabali is releasing tomorrow all over the world and FDFS for the fans is being released in Malaysia.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil