»   »  கபாலி ஷூட்டிங்... 200 மலேசிய - தாய்லாந்து நடிகர்களுடன் படமாக்கப்பட்ட நெருப்புக் கலவர காட்சி!

கபாலி ஷூட்டிங்... 200 மலேசிய - தாய்லாந்து நடிகர்களுடன் படமாக்கப்பட்ட நெருப்புக் கலவர காட்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னைப் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு கபாலி 'புயல்' மலேஷியாவில் மையம் கொண்டுள்ளது.

மலேசியா கிளம்பும் முன் சென்னையில் படமாக்கப்பட்ட கடைசி காட்சி மிக முக்கியமானது. பதற வைக்கும் ஒரு பெரிய நெருப்புக் கலவரம்.. அதில் கபாலி ரஜினி... இந்தக் காட்சியை மட்டும் சென்னையின் முக்கிய ஸ்டுடியோ ஒன்றில் செட் போட்டு எடுத்துள்ளனர்.

Kabali fire riot scene

இதில் நடிக்க கோவா போன்ற நகரங்களுக்கு சுற்றுலா வந்திருந்த ஏராளமான மலேசிய - தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களை அழைந்து வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.

படம் வெளியானால் இந்தக் காட்சி பெரிதும் பேசப்படும் என்கிறார்கள் படப்பிடிப்பில் பங்கேற்றவர்கள்.

நிற்க...

இன்று காலை மலேசியா கிளம்பிப் போன ரஜினிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏக வரவேற்பு. பிரமாண்ட லிமோசின் காரில் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர். சென்னைக்கு நிகராக ரசிகர்கள் கூட்டம் மலேசியாவில் திரண்டு நின்றதாம் ரஜினியைப் பார்க்க.

English summary
As reported earlier, team Kabali has wrapped up Chennai portions and now, they are off to Malaysia for the second schedule. Apparently, sources say that director Ranjith has shot a stunning fire riot scene in the last few days of Chennai schedule.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil