»   »  கபாலி படத்தின் முதல் நாள் தமிழ்நாடு வசூல் மட்டும் 80 கோடி?- இது கழுகார் கணக்கு

கபாலி படத்தின் முதல் நாள் தமிழ்நாடு வசூல் மட்டும் 80 கோடி?- இது கழுகார் கணக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்தைப் பற்றி இன்று வெளியான ஜுனியர் விகடன் இதழின் கழுகார் பகுதியில் சில செய்திகள் பகிரப்பட்டுள்ளன.

அதில் பட டிக்கெட்டுகள் எப்படி பிளாக்கில் அதிக விலைக்கு விற்கப்பட்டன என்ற விவரம் உள்ளது.

அதில் ஒரு கணக்கு தரப்பட்டுள்ளது.

Kabali first day collection in Tamil Nadu

'தமிழகத்தில் மட்டும் 640 தியேட்டர்களில் படம் வெளியாகி உள்ளது. ஒரு தியேட்டருக்கு 250 சீட்டுகள் என வைத்துக்கொண்டாலும் ஒரு லட்சத்து அறுபதாயிரம் சீட்டுகள்.

படம் வெளியான முதல் நாள் எல்லாமே ஹவுஸ்ஃபுல் காட்சிகள். எனவே 5 காட்சிகளுக்கு மொத்தம் எட்டு லட்சம் டிக்கெட்டுகள். ஒரு டிக்கெட் விலை ஆயிரத்தை தாண்டி விற்கப்பட்டுள்ளது.

குறைந்தது ஆயிரம் ரூபாய் என வைத்துக்கொண்டாலும் எண்பது கோடி வரை டிக்கெட் விற்பனையில் வந்திருக்கும்,'' இப்படி ஒரு கணக்கு சொல்கிறது.

எனவே 'தலைவர்' படம் முதல் நாளே நூறு கோடியை தாண்டி வரலாறு படைத்திருக்கிறது!

English summary
Rajinikanth's Kabali movie has reached a new high in first day collection, as per Junior Vikatan report.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil