»   »  கபாலி ரஜினி மூலம் நான் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டேன்! - ரஞ்சித்

கபாலி ரஜினி மூலம் நான் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டேன்! - ரஞ்சித்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலியில் சூப்பர் ஸ்டார் ரஜினி மூலம் நான் சொல்ல நினைத்தவற்றைச் சொல்லிவிட்டேன் என்றார் இயக்குநர் ரஞ்சித்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருக்கிறார்.

இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பரப்பப்பட்டாலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. உலக அளவில் வேறு இந்தியப் படங்கள் செய்யாத வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இந்த சூழலில் 'கபாலி' படம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் என பலரும் பங்கேற்ற கூட்டம் இது.

ஏன் எடுத்தேன்?

ஏன் எடுத்தேன்?

இதில் கலந்து கொண்டு இயக்குநர் ரஞ்சித் பேசுகையில், "இந்த படம் ஏன் எடுத்தேன் என்று எனக்கு தெரியும். அது சரியாக போய் சேர்ந்துவிட்டது என நினைக்கிறேன். இந்தப் படம் வெளியாகும் முதல் நாளே, இதனைக் காலி பண்ண முனைவார்கள் என்பதை எதிர்ப்பார்த்தேன். அதுமட்டுமன்றி இதனைப் பற்றி பலரும் பேசுவார்கள் என நினைத்தேன்.

25-ம் நாளும் ஹவுஸ்ஃபுல்

25-ம் நாளும் ஹவுஸ்ஃபுல்

மக்கள் கொண்டாடவில்லை என்றால் இப்படம் இந்தளவுக்கு வந்திருக்காது. 25ம் நாள் வரை தமிழகத்தில் நிறைய திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல். இந்தப் படம் கமர்ஷியலாக வெற்றியடைய வேண்டும் என நினைத்தேன். ஏனென்றால் அப்போதுதான் அது சார்ந்த சினிமாக்கள் நிறைய வரும். அது சார்ந்து மக்களிடையே போய்ச் பேச முடியும். தோல்வியடைந்து விட்டதால் அதைப் பற்றி அதற்குப் பிறகு பேசவே முடியாது.

கபாலியைத் தொடர்ந்து...

கபாலியைத் தொடர்ந்து...

'அட்டகத்தி' படம் வெற்றியடையவில்லை என்றால் நான் இங்கு இருக்கவே முடியாது. அப்படம் தோல்வியடைந்திருந்தால் நானும் என் கருத்துக்களை ஒரமாக வைத்துவிட்டு, ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்பில் வேறு ஏதாவது சினிமா பண்ணியிருப்பேன். 'அட்டகத்தி' ஜெயித்ததால் 'மெட்ராஸ்' ஜெயித்ததால் 'கபாலி' எடுத்தேன். தற்போது 'கபாலி' ஜெயித்திருப்பதால் வேறு சில படங்கள் எடுக்கப் போகிறேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

திட்டமிட்டு அவதூறு

திட்டமிட்டு அவதூறு

பொதுமக்கள் எப்போதுமே ஆதரவு அளிக்கிறார்கள். திருவண்ணாமலையில் ஒரு திரையரங்கில் வெளியே 15 பேர் நின்று கொண்டு இப்படம் நன்றாக இல்லை, போகாதீர்கள் என 2ம் நாளே கூறிக் கொண்டு இருந்ததாகச் சொன்னார்கள். முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் இப்படம் பற்றி நிறைய எழுதினார்கள். சென்னையில் கபாலிக்கு எதிராக ஏகத்துக்கும் அவதூறு பரப்பினார்கள். ஆனால் அத்தனையையும் முறியடித்தது படம்.

சூப்பர் ஸ்டார் என்ற குரலின் சத்தம்...

சூப்பர் ஸ்டார் என்ற குரலின் சத்தம்...

'கபாலி'யில் பிரச்சினை இருக்கிறது. அது என்ன பிரச்சினை என்பது எனக்கு தெரியும். அதையும் மீறி தான் இப்படத்தை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று யோசித்தோம். ரஜினி என்கிற சூப்பர் ஸ்டார் பிம்பம் எனக்கு அவசியம் தேவையாக இருந்தது. நான் யார் மூலமாக என் குரலை பேச வேண்டும் என்று நினைத்தேனோ, அதன் மூலமாக தான் பேசியிருக்கிறேன். அந்த குரலின் சத்தம், விரீயம் அனைவருடைய காதையும் கிழித்திருக்கிறது என்று நம்புகிறேன். அடுத்ததாக அந்த குரல் அனைவருடைய வீடுகளிலும் தொலைக்காட்சியில் பேசும். இப்படம் மூலமாக பல விவாதங்கள் நடைபெற்ற சந்தோஷம் எனக்கு கிடைத்திருக்கிறது.

சந்தோஷம்

சந்தோஷம்

புலம் பெயர்ந்த தமிழர்கள் எங்கியிருந்தாலும் இப்படம் பற்றி பேசியிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்ற இமேஜை சமூகத்தின் சில விஷயங்களுக்காக பயன்படுத்தி இருக்கிறோம் என்று நினைக்கும் போது ஒரு படைப்பாளியாக சந்தோஷம் கிடைத்திருக்கிறது.

காலி பண்ண நினைப்பவர்கள் பற்றி கவலை இல்லை

காலி பண்ண நினைப்பவர்கள் பற்றி கவலை இல்லை

நியாயமான விமர்சனங்களை நான் எடுத்துக் கொள்கிறேன். அந்த மாதிரியான விமர்சனங்கள் தான் படைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என நினைக்கிறேன். என்னை திட்டுகிறவர்களைப் பற்றியோ, என்னை காலி பண்ண வேண்டும் என நினைப்பவர்கள் பற்றியோ எனக்கு எந்தொரு கவலையும் கிடையாது.

அண்ணலின் குரல்

அண்ணலின் குரல்

ஏனென்றால் இந்த இந்திய சமூகத்தில், சுதந்திர போராட்டத்தின் போது இறுதிவரைக்கும் ஒரே ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்த குரல் இரவு தூங்கக் கூட இல்லை. 'என்னுடைய சுதந்திர இந்தியாவில் இன்னும் என் மக்கள் மட்டும் சுதந்திரம் அடையாமல் இருக்கிறார்களே' என்று ஒலித்த அண்ணலின் குரல் அது. அந்த குரலில் ஒரு சிறு விஷயமாவது எனக்கு இருக்க வேண்டும் என நினைத்தேன். அப்படித்தான் என்னுடைய குரல் இறுதிவரை இதைப் பற்றி பேசும் என நினைக்கிறேன். அந்த வெற்றியை எனக்கு 'கபாலி' படைப்பு கொடுத்திருக்கிறது," என்றார்.

English summary
Kabali director Pa Ranjith says that he had achieved what he determined through Rajini's superstar image in Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil