»   »  இத்தாலி போகும் கபாலி!

இத்தாலி போகும் கபாலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் சப் டைட்டிலோடு இத்தாலியில் திரையிடப்பட உள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம், ரஜினி பட வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக வெளியாகிறது. உலகெங்கும் பலமான எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.


இந்தப் படம் சீனா, ஹாங்காங், ப்ரான்ஸ், ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், பிரிட்டன், அமெரிக்கா, கனடா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளில் வெளியாகவிருக்கிறது.


Kabali goes to Italy

இப்போது முதல் முறையாக இத்தாலியில் வெளியாகும் தமிழ்ப் படம் என்ற பெருமையைப் பெறுகிறது.


கபாலியின் 35 நொடி ட்ரைலரை சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளனர். நெருப்புடா என்ற கர்ஜனையுடன் தொடங்கிய இந்த ட்ரைலருக்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது.


இதையெல்லாம் பார்த்த இத்தாலிய சினிமா பிரமுகர் மிஷெல் க்ராஷியோலா என்பவர், பாலிவுட் சினிமாக்காரர்கள் சிலரிடம் ரஜினி குறித்து விசாரித்து தெரிந்துகொண்டு, விழாவுக்கு சென்றிருந்த ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷை அணுகியுள்ளார். அவரிடம் கபாலியை இத்தாலியில் வெளியிட அனுமதி கோரியுள்ளார். அவரும் கலைப்புலி தாணுவைக் கைகாட்டி விவரங்கள் கொடுத்தாராம்.


கபாலி இங்கு வெளியாகும்போதே இத்தாலியிலும் வெளியாகவிருக்கிறது. இத்தாலிய திரைப்பட விழாக்களிலும் கலந்து கொள்ளவிருக்கிறது.

English summary
Rajinikanth's Kabali movie is going to release in Italy with sub titles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil