»   »  இது என்ன புது கலாட்டா... மலேசிய 'கபாலி' போலீஸில் சரணடைந்தாரா?

இது என்ன புது கலாட்டா... மலேசிய 'கபாலி' போலீஸில் சரணடைந்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி திரைப்படத்தின் முடிவு ரஜினி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியைக் கொடுத்துள்ள போதிலும், மலேசியாவில் வேறு விதமான முடிவை படத்தில் காட்டியுள்ளதாக ஒரு புதுத் தகவல் பரவி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி பல விதமான கருத்துக்களைப் பரப்பி வருகிறது. படமாக்கிய விதம் சரியில்லை, இசை சரியில்லை, ரஜினியை வேஸ்ட் செய்து விட்டார் ரஞ்சித் என்றெல்லாம் விமர்சனங்கள் கச்சை கட்டி கிளம்பியுள்ளன.


இந்த நிலையில் இன்னொரு பரபரப்புத் தகவல் தற்போது பரவி வருகிறது. அதாவது மலேசியாவில் திரையிடப்பட்டுள்ள கபாலி படத்தின் கடைசிக் காட்சியில் ரஜினி போலீஸில் சரணடைவதாக வாசகம் வருகிறதாம்.


இரு வேறு முடிவு

இரு வேறு முடிவு

இந்தியாவில் திரையிடப்பட்டவுள்ள கபாலி படத்தின் கடைசிக் காட்சியில் வேறு விதமான முடிவையும், மலேசியாவில் திரையிடப்பட்டுள்ள படத்தில் வேறு விதமான முடிவையும் வைத்திருப்பதாக இந்த செய்தி கூறுகிறது.


மலேசிய கபாலி

மலேசிய கபாலி

அதாவது மலேசியாவில் திரையிடப்பட்டுள்ள கபாலியில், கடைசியில் "இறுதியில் கபாலி போலீஸில் சரணடைந்தார்" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளதாம். இதனால் இந்தியாவுக்கு ஒரு மாதிரியும், மலேசியாவுக்கு ஒரு மாதிரியும் முடிவு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


முதல் முறையல்ல

முதல் முறையல்ல

இது உண்மையாக இருந்தால், ரஜினி படத்தில் இப்படி இடம் பெறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் கூட ஒரு ரஜினி படத்தில் இப்படி நடந்துள்ளது.


தளபதியில்

தளபதியில்

ரஜினி - மம்முட்டி நடித்த தளபதி படத்திலும் கூட இப்படித்தான் கேரளாவில் வெளியான படத்தின் கிளைமேக்ஸில் ரஜினி இறப்பது போலவும், பிற பகுதிகளில் வெளியான படத்தில் மம்முட்டி இறப்பது போலவும் கிளைமேக்ஸ் வைத்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.


English summary
Is Kabali having a different end in Malayais? This is the question that haunts many among the fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil