»   »  கபாலி தோல்வி படம்.. வைரமுத்துவுக்கு இது தேவையா?

கபாலி தோல்வி படம்.. வைரமுத்துவுக்கு இது தேவையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி ஒரு தோல்வி திரைப்படம் என்று பாடலாசிரியர் வைரமுத்து பொது மேடையில் பேசியதாக கூறி ஒரு வீடியோ வைரலாக சுற்றி வருகிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் கபாலி. இப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

படம் வெளியாகி 3 நாட்களிலேயே ரூ.200 கோடியை ஈட்டி வசூல் சாதனை படைத்துள்ளது கபாலி.

வசூல் சர்ச்சை

வசூல் சர்ச்சை

இருப்பினும், படம் ரிலீசாகும் முன்பே முன்கூட்டியே முன்பதிவு செய்துவிட்ட டிக்கெட் விற்பனையால் இவ்வளவு லாபம் வந்துள்ளதாகவும், படம் பார்த்த பிறகு மீண்டும், மீண்டும் பார்க்க தூண்டுவதாக இல்லை என்றும் மற்றொரு தரப்பு விமர்சனத்தை முன் வைக்கிறது.

சக்சஸ்

சக்சஸ்

படைப்பு ரீதியான சர்ச்சை ஒரு புறம் இருப்பினும், வசூல் ரீதியாக கபாலி பிளாக் பஸ்டர் திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடம் இருக்க முடியாது.

தோல்வி படம்

தோல்வி படம்

கபாலி வசூல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிந்தாலும், சினிமா பாடலாசிரியரான 'கவிப்பேரரசு' வைரமுத்து, கபாலியை தோல்வி படம் என்று கூறிவிட்டாராம்.

வைரல் வீடியோ

சமீபத்தில் நடைபெற்ற அரிமா சங்க கூட்டம் ஒன்றில் பங்கேற்ற வைரமுத்து, மேடையில் பேசுவது போன்ற ஒரு வீடியோ துணுக்கு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பாட்டு எழுதவில்லை

பாட்டு எழுதவில்லை

இந்த வீடியோவில் கபாலி கோர்ட் குறித்தும் கேலியாக வைரமுத்து பேசியுள்ளார். நீண்ட காலத்திற்கு பிறகு ரஜினி படத்திற்கு பாட்டெழுதும் வாய்ப்பு கபாலியில் வைரமுத்துவிற்கு கிடைக்கவில்லை. கபாலி, உமாதேவி போன்ற பாடலாசிரியர்கள் பாட்டை எழுதியிருந்தனர்.

காப்பியடித்த ரஞ்சித்

காப்பியடித்த ரஞ்சித்

வைரமுத்து அந்த பேச்சில் கூறியிருப்பதாவது: கபாலிக்கு முன்னாடியே கோர்ட் போட்டது நீங்கதான் (மேடையில் இருந்த அரிமா சங்க நிர்வாகியை பார்த்து) என்று நினைக்கிறேன். உங்களை பார்த்துதான், ரஞ்சித் காப்பியடித்து, ரஜினிக்கு போட்டு கபாலி ஓடிக்கொண்டிருக்கிறது.

குளிக்கும்போது கோர்ட்

குளிக்கும்போது கோர்ட்

அரிமா சங்கத்துகாரர்களே இப்படித்தான். குளிக்கும்போது கூட கோர்ட் போடுவார்கள் (சிரிப்பு).

கபாலி தோல்வி

கபாலி தோல்வி

நான் புரிந்து கொள்கிறேன் ஒவ்வொருவரையும். இந்த கூட்டத்தை, வந்திருக்கிற பெருமக்களை, அரசியலை, விஞ்ஞானத்தை, இல்லறத்தை, வாழ்வியலை, ஆணை, பெண்ணை, குழந்தையை, தொலைந்து போன விமானத்தை, கபாலியின் தோல்வியை, எல்லாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஏற்றுக்கொள்வது வேறு விஷயம். அப்படி புரிந்து கொள்ள சொல்லித்தருவது நல்ல கவிதை. இவ்வாறு வைரமுத்து பேசியதாக அந்த வீடியோ வைரலாக சுற்றி வருகிறது.

English summary
Kabali is a defeated movie, says Vairamuthu in a stage speech.
Please Wait while comments are loading...