»   »  இப்படி ஆளுங்க இருந்தா கபாலி ஏன் ஹிட்டாகாது?

இப்படி ஆளுங்க இருந்தா கபாலி ஏன் ஹிட்டாகாது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தை சென்னையை சேர்ந்த தம்பதிகள் 5வது முறையாக தியேட்டரில் பார்த்துள்ளனர்.

சென்னை ஓ.எம்.ஆரில் உள்ள இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிபவர் ஜோதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது கணவர் ராமு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவனும், மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள்.

Kabali is a hit: Why wouldn't be?

கபாலி படம் ரிலீஸான கையோடு அதை தியேட்டரில் பார்த்து ரசித்தனர். ஒரு முறை பார்த்தும் திருப்தி அடையாமல் மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு சென்று 4 முறை படத்தை பார்த்துள்ளனர். இந்நிலையில் கபாலியை மீண்டும் திரையில் பார்க்கும் ஆசை அவர்களுக்கு வந்தது.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை இருவரும் தங்களின் அலுவலகங்களில் பெர்மிஷன் போட்டு முன்கூட்டியே கிளம்பினர். அலுவலகங்களில் இருந்து கிளம்பிய அவர்கள் நேராக தியேட்டருக்கு சென்று கபாலி படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

ஏம்ப்பா, அது தான் ஏற்கனவே 4 முறை கபாலி படத்தை பார்த்துவிட்டீங்களே, ஏதாவது நல்ல ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டியது தானே அல்லது அந்த பணத்தை சேமிக்கலாமே என அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு அவர்களோ, தலைவர் என்னம்மா நடித்திருக்கிறார். அவரை தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இப்படி ஓடியோடி கபாலியை பார்த்தால் படம் நிச்சயம் ஹிட்டாகத் தான் செய்யும். நீங்க எல்லாம் நல்லா வருவீங்க!

English summary
A married couple from Chennai has watched Superstar Rajinikanth's Kabali five times in theatre.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil