»   »  தளபதியும், நாயகனும் சேர்ந்ததுதான் கபாலி... ரஞ்சித்தைப் பாராட்டிய ரஜினி... தாணு நெகிழ்ச்சி!

தளபதியும், நாயகனும் சேர்ந்ததுதான் கபாலி... ரஞ்சித்தைப் பாராட்டிய ரஜினி... தாணு நெகிழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படம் தளபதியும், நாயகனும் சேர்ந்த படம் எனக் கூறி இயக்குநர் ரஞ்சித்தை ரஜினி பாராட்டியதாக தயாரிப்பாளர் தாணு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படம் வெளியான சில நாட்களிலேயே ரூ. 321 கோடியை வசூல் செய்து வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடி வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ரஜினியைத் தவிர்த்து இயக்குநர் ரஞ்சித், தயாரிப்பாளர் தாணு உட்பட கபாலி படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Kabali is the mixture of Kamal's Nayagan and Thalapathi : Rajini told S. Thanu

அப்போது பேசிய தாணு, "எனக்கும், ரஜினி சாருக்கும் கபாலி படத்திற்கான கதையை ரஞ்சித் சொல்லிமுடிக்கும்போது, எழுந்து நின்று கைதட்டினேன். ரஜினி இந்தக் கதையை அப்படியே படமாக்கலாம் என்று நம்பிக்கையை கொடுத்தார்.

அதன் பிறகு நான் தயாரிப்பு சார்ந்து எதிலும் தலையிடவில்லை. அவர்களுக்கான சுதந்திரமே எங்களுக்கான வெற்றியாக அமைந்தது. முக்கியமாக டீசரில் ஹிட்டடித்த, தலையைக் கோதியபடி நடக்கும் காட்சியின்போது ரஜினிக்கு கொதிக்கும் ஃபீவர். ஆனால் அந்த நிலையிலும் சில காட்சிகள் நடித்தார். அந்த காட்சிகள் தான் இன்று பெரிய வெற்றியை பெற்றுத்தந்திருக்கிறது.

ரஜினி என்னிடம் பேசும்போது, "உனக்கும் எனக்கு உள்ள நட்பிற்கு கபாலி ஒரு கிரீடம், இந்தப் படத்த பாட்ஷானு எல்லோரும் சொல்லுறாங்க, ஆனா இந்தப் படம் தளபதியும், நாயகனும் சேர்ந்த ஒரு படம். ரஞ்சித் கிரேட்" என்று சொன்னது அவ்வளவு நெகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.

English summary
‘After watching the film, Rajini sir told me that Kabali would be a jewel in the crown of V Creations. It has come true’, said Thanu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil