»   »  'கபாலி ரொம்பக் கெட்டவன்டா'... ரஜினியின் வசனங்களால் அதிரும் திரையரங்குகள்!

'கபாலி ரொம்பக் கெட்டவன்டா'... ரஜினியின் வசனங்களால் அதிரும் திரையரங்குகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி-ராதிகா ஆப்தே நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் 'கபாலி' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ரஞ்சித் இயக்கம், ரஜினி நடிப்பு மட்டுமின்றி படத்தில் நடித்த ஒவ்வொருவரின் நடிப்புமே தங்களைக் கவர்ந்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினிக்கு அதிகளவில் பஞ்ச் வசனங்கள் இல்லையென்றாலும், படத்தின் வசனங்கள் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

கபாலியில் இருந்து ரசிகர்களை மகிழ்வித்த ஒருசில வசனங்களை இங்கே பார்க்கலாம்.

கெட்டவன்

கபாலி ரொம்பக் கெட்டவன் என்று ரஜினி சொல்லும்போது ரசிகர்களின் கைதட்டல்களால் திரையரங்கமே அதிர்ந்தது என கவி சிலிர்ப்புடன் பதிவிட்டிருக்கிறார்.

காந்தி vs அம்பேத்கார்

காந்தி, அம்பேத்கார் இருவரைப் பற்றிய அரசியல் வசனத்தை சுட்டிக்காட்டி ஹரிபிரசாத் பாராட்டியிருக்கிறார்.

பெரும் மகிழ்ச்சி

மகிழ்ச்சி- பெரும் மகிழ்ச்சி இடையிலான வித்தியாசத்தை ரஜினி ரசிகர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஆண்ட பரம்பரை

ரஜினி-வில்லன் இடையிலான ஆண்ட பரம்பரை வசனத்தை பிரதாப் மனோகர் பதிவிட்டு பாராட்டியிருக்கிறார்.

ரஜினி

தலைவரோட எக்ஸ்பிரஷனுக்காக படத்தை எத்தனை தடவை வேணாலும் பார்க்கலாம் என்று பிரசன்னா மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

இதுபோல ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் 'கபாலி' தங்களைக் கவர்ந்திருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் கபாலி- மகிழ்ச்சி!

English summary
Rajini- Rathika Apte Starrer Kabali Released Today Worldwide- Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil