»   »  இரண்டாவது வாரமும் தொடர்கிறது 'கபாலி மேனியா'!

இரண்டாவது வாரமும் தொடர்கிறது 'கபாலி மேனியா'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்தின் கபாலி படத்துக்கு இரண்டாவது வாரமும் கூட்டம் அலைமோதுகிறது. வசூலில் நிகரற்ற சாதனையைப் படைத்துள்ளது இந்தப் படம்.

கபாலி படம் கடந்த ஜூலை 22-ம் தேதி உலகெங்கும் வெளியாகி பெரும் வசூலைக் குவித்து வருகிறது.

இந்தப் படம்தான் இந்தியாவிலேயே பெரிய ஓபனிங்குடன் வெளியான படம். அதிக முதல் வார வசூல் குவித்த படம், இந்தியாவில் அதிக வசூல், உலக அளவில் அதிக வசூல் என ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளது.

Kabali Mania continues in second week too

முதல் 7 நாட்களில் இந்தப் படம் கிட்டத்தட்ட ரூ 400கோடியை நெருங்கியிருந்தது.

இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று இரண்டாவது வாரத்துக்குள் நுழைந்தது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும், கிட்டத்தட்ட ஆரம்ப வார வசூலுக்கு நிகரான தொகையைக் குவித்துவிட்டது கபாலி.

சென்னை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சை, புதுவை, சேலம் என நகர்ப் பகுதிகளில் எந்தத் திரையரங்கிலும் கபாலி டிக்கெட் கிடைக்கவில்லை. இரண்டாம் கட்ட நகரங்களான கடலூர், சிதம்பரம், நாகர்கோயில் போன்ற பகுதிகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக கபாலி ஓடிக் கொண்டுள்ளது.

சென்னை நகரில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 1100 காட்சிகள் திரையிடப்பட்டது கபாலி. இந்த மூன்று தினங்களிலும் மூன்று கோடி ரூபாயை வசூலித்துள்ளது. சென்னை நகரில் மட்டும் இதுவரை ரூ 10 கோடிக்கு மேல் வசூலாகப் பெற்று சாதனைப் படைத்துள்ளது கபாலி.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கபாலியின் வசூல் பிரமிக்க வைப்பதாய் உள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ், வளைகுடா நாடுகளில் இரண்டாவது வாரத்திலும் ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்து படம் பார்த்தனர்.

English summary
Rajinikanth's Kabali is rocking in all areas in the second week also.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil