»   »  கபாலி ஸ்டிக்கர்களுடன் கார்களில் 'மகிழ்ச்சி'யாக பவனி வரும் ரஜினி ரசிகர்கள்!

கபாலி ஸ்டிக்கர்களுடன் கார்களில் 'மகிழ்ச்சி'யாக பவனி வரும் ரஜினி ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கபாலி' வெளியீட்டிற்கு இன்னும் ஒருசில தினங்களே உள்ளதால், எப்போது அந்தநாள் வரும் என்று ரஜினி ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

இயக்குநர் ரஞ்சித் கூட படத்தை விளம்பரப்படுத்தியது போதும் உடனே வெளியிடுங்கள் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.


அந்தளவு இப்படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார் படத்தின் இயக்குநர் தாணு. விமானம் தொடங்கி மொபைல் நிறுவனம் வரை எல்லா இடங்களிலும் 'கபாலி' ரஜினி தரிசனம் ரசிகர்களுக்கு கிடைத்து வருகிறது.


விமானம்

விமானம்

ஏர்ஏசியா விமானம் ரஜினியின் கபாலி போஸ்டர்களைத் தாங்கி வானில் பறந்து கொண்டிருக்கிறது. இதுதவிர முத்தூட் நிறுவனம் ரஜினியின் உருவத்தை தங்கம், வெள்ளி நாணயங்களில் அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.


கபாலி

கபாலி

கபாலி டீ-ஷர்ட்கள், கபாலி கஃபே என்று சிறு நிறுவனங்களும் இந்த விளம்பரத்தில் குதித்துள்ளனர். இதனால் தமிழ்நாடு தாண்டி பெங்களூர், ஓசூர் போன்ற பகுதிகளிலும் கபாலி பீவர் அதிகரித்து வருகிறது.


கார்கள்

கார்கள்

இந்நிலையில் ரஜினியின் போஸ்டர்கள், பஞ்ச் வசனங்கள், கபாலியின் நடிக, நடிகையர் உள்ளிட்ட போஸ்டர்களை, கார்களில் பயன்படுத்தும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. விலையுயர்ந்த லம்போர்கினி தொடங்கி நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மாருதி ஸ்விப்ட் கார் வரை கபாலி படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றன.


நெருப்புடா நெருங்குடா

நெருப்புடா நெருங்குடா

குறிப்பாக கபாலி டீசரில் இடம்பிடித்த நெருப்புடா 'நெருங்குடா', 'மகிழ்ச்சி', 'வந்துட்டேன்னு சொல்லு நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு', கபாலி என படத்தின் பஞ்ச் வசனங்கள் கார்களின் பின்புறம் முழுவதும் நிரம்பி வழிகிறது.
சமூக வலைதளங்கள்

சமூக வலைதளங்கள்

தங்களது கபாலி கார்களுடன் மகிழ்ச்சியாக வலம்வரும் ரசிகர்கள் கார்களைப் படம்பிடித்து இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் இணையம் முழுவதும் கபாலி போஸ்டர்களைத் தாங்கிய கார்கள் வைரலாகி வருகின்றன.


English summary
Kabali will hit on the Screens on July 22nd. Now Rajini Fans Celebrating Kabali Movie Posters on their Cars.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil