»   »  ரஜினியின் கபாலி.. கலக்கும் புதிய போஸ்டர்கள்!

ரஜினியின் கபாலி.. கலக்கும் புதிய போஸ்டர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையத்தில் இன்று கலக்கிக் கொண்டிருப்பவை ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கபாலி படத்தின் புதிய போஸ்டர்கள்தான்.

இன்று ஒரே நாளில் மூன்று புதிய போஸ்டர்கள் வெளியானதில் ரஜினி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

Kabali new designs released

லிங்கா படத்தையடுத்து ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய பா.இரஞ்சித் இயக்குகிறார்.

ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Kabali new designs released

முரளி ஒளிப்பதிவில் பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். சென்னையில் தொடங்கிய கபாலியின் படப்பிடிப்பு கோவா, மலேசியா, சிங்கப்பூர் என அடுத்தகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

கபாலி படத்தின் 'டீசர்' அண்மையில் வெளியாகி, உலகம் முழுவதும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், கபாலி படத்தின் பாடல்கள் ஜூன் 12 அன்று கபாலி பாடல்கள் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்தார்.

Kabali new designs released

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர்களை கலைப்புலி தாணு அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்.

இந்தப் படத்தின் இந்தி, தெலுங்கு போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்டனர். இன்று கபாலியின் தமிழ் போஸ்டர்கள் மூன்று வெளியாகியுள்ளன. இவை மூன்றிலுமே ரஜினி வயதான கெட்டப்பில் இருந்தாலும், ரசிகர்கள் அவற்றைக் கொண்டாடி வருகின்றனர்.

English summary
The new designs of Rajinikanth's Kabali movie have been released today and Rajini fans celebrating the posters.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil