»   »  கபாலியை 'ஸ்டார் ஹோட்டல்'களில் திரையிட... கர்நாடகா வர்த்தக சபை கடும் எதிர்ப்பு!

கபாலியை 'ஸ்டார் ஹோட்டல்'களில் திரையிட... கர்நாடகா வர்த்தக சபை கடும் எதிர்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ரஜினியின் 'கபாலி' திரைப்படத்தை பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் திரையிட, கர்நாடக வர்த்தக சபை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள கிரவுன் பிளாசா, யலகங்காவிலுள்ள ராயல் ஆர்ச்சிட், குமாரகிருபா சாலையிலுள்ள லலித் அசோக், விட்டல் மல்லையா சாலையிலுள்ள ஜே.டபிள்யூ.மேரியட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களில், கபாலி படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் திட்டமிட்டிருந்தனர்.


Kabali not Screened in Star Hotels

இதுகுறித்து லஹரி மியூசிக் நிறுவனர் ஆனந்த் ''வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் தினசரி நான்கு காட்சிகளை திரையிடத் திட்டமிட்டிருக்கிறோம்.


ஒரு காட்சிக்கு ரூ.1300 கட்டணம். இதற்கான டிக்கெட்டுகள் புக் மை ஷோ என்னும் இணையதளத்தில் கிடைக்கும். ஒரே நேரத்தில் 300 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் நல்ல சவுண்ட் எஃபெக்டுடன் படம் திரையிடப்படும்'' என கூறியிருந்தார்.


இந்நிலையில் ஸ்டார் ஹோட்டல்களில் இப்படத்தைத் திரையிட கர்நாடகா வர்த்தக சபை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் '' திரையரங்கு தவிர்த்து வெளியிடங்களில் திரைப்படத்தை திரையிட முடியாது.


ஒருவேளை அப்படி திரையிட்டால் முன்னதாக மின்சார வாரியம், தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை, மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டவர்களிடம் அனுமதி பெற வேண்டும்.


ஆனால் கபாலி திரைப்படத்தை திரையிட இதில் எந்த வழிமுறைகளும் பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. இதனால் கபாலி திரையிடுவதைத் தடுக்குமாறு கர்நாடக அரசின் உள்துறை செயலர், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு கர்நாடக வர்த்தக சபையின் சார்பாக கடிதம் எழுதி இருக்கிறேன்'' என தெரிவித்திருக்கிறார்.

English summary
Karnataka film chamber has objected to the screening of kabali in star hotels.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil