»   »  ஜூலை 1-ல் பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் கபாலி!

ஜூலை 1-ல் பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் கபாலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் என்ற எல்லை தாண்டி, சர்வதேச அளவில் எதிர்ப்பாப்புக்குரிய படமாகிவிட்ட கபாலியின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் வரும் ஜூலை 1-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.


பா ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினி மூன்றுவிதமான கெட்டப்புகளில் வருகிறார். அவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.


கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


டான்

டான்

இப்படத்தில் மலேசியாவின் டான் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். தன்ஷிகா, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.


இளமை ரஜினி

இளமை ரஜினி

நிஜத்தில் 65 வயதாகும் ரஜினி, அந்த வயதுக்கேற்ற ஒரு கெட்டப்பில் வருகிறார். இன்னொரு கெட்டப்பில் 30 வயது இளைஞனாகத் தோன்றி அசத்தவிருக்கிறார்.


தைவான், மலேசிய நடிகர்கள்

தைவான், மலேசிய நடிகர்கள்

இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு, இதுவரை தமிழ் திரையில் தோன்றியிராத பல கீழை நாட்டு நடிகர்கள் நடிப்பது. ரஜினிக்கு பிரதான வில்லனாகத் தோன்றும் வின்ஸ்டன் சாவ் தைவான்காரர். இவருடன் பல மலேசிய நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.


டீசர் சாதனை

டீசர் சாதனை

சமீபத்தில் வெளியான கபாலி படத்தின் டீஸர் செம ஹிட். இந்தியாவைப் பொருத்தவரை மிக அதிகம் பேரால் பார்க்கப்பட்ட டீசர் கபாலிதான். உலக அளவில் மிகக் குறுகிய காலத்தில் 17.4 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டதும் கபாலி டீசர்தான்.


வெளிநாட்டு விமர்சகர்கள் பாராட்டு

வெளிநாட்டு விமர்சகர்கள் பாராட்டு

இதுவரை தமிழ்ப் பட டீசர்களை வெளிநாட்டு சினிமா விமர்சகர்கள் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் கபாலியின் டீசருக்கு கிடைக்கும் பார்வைகள், விருப்பங்கள் அவர்களையும் ஈர்த்துள்ளது. ஏராளமான வெளிநாட்டு விமர்சகர்கள் பார்த்து, தங்களை கருத்துகளை விமர்சனமாக யுட்யூபில் பதிவு செய்து வருகின்றனர். ஒரு தமிழ்ப் படத்துக்கு இத்தனை வெளிநாட்டவர்கள் விமர்சனங்கள் பதிவு செய்திருப்பது இதுவே முதல் முறை.


ரிலீஸ் தேதி

ரிலீஸ் தேதி

படத்தின் இசை வெளியீட்டுத் தேதி மற்றும் ரிலீஸ் தேதியை தேர்தல் முடிந்த பிறகு அறிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ரிலீஸ் தேதி மட்டும் வெளியாகியுள்ளது. ஜூலை 1-ம் தேதி உலகெங்கும் இந்தப் படம் பிரமாண்டமாக வெளியாகிறது.


தமிழ் - தெலுங்கு - சீன மொழிகளில்

தமிழ் - தெலுங்கு - சீன மொழிகளில்

இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. சீன மொழியிலும் இந்தப் படத்தை டப் செய்துள்ளார் கலைப்புலி தாணு. சீனாவிலும் படம் வெளியாகிறது. எத்தனை அரங்குகள் என்பதை பின்னர் அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.


English summary
Rajinikanth's much waited movie Kabali will be released on July 1st worldwide.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil