»   »  கபாலி ரிசர்வேஷன்... சிறப்புக் காட்சி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!

கபாலி ரிசர்வேஷன்... சிறப்புக் காட்சி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் கபாலி படத்துக்கான முதல் நாள் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுகள் படம் வெளியாகும் அனைத்து நாடுகளிலும் சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தன.

கபாலி படம் வரும் ஜூலை 22-ம் தேதி வெளியாகிறது. படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாகவே சிறப்புக் காட்சிகள் (பிரிமியர்) நடப்பது வழக்கம். பெரிய ஹாலிவுட் படங்களுக்கு இந்த சிறப்புக் காட்சி மூலமே பல கோடி வசூல் கிடைக்கிறது. ரஜினி படங்களில் சிவாஜி, எந்திரன், லிங்கா போன்ற படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு நல்ல வசூல் கிடைத்தது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில்.

Kabali premier show tickets sold out in hours

இந்த முறை கபாலி படம் உலகெங்கும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகிறது. இதுவரை தமிழ்ப் படங்கள் வெளியாகாத போலந்து, இத்தாலி போன்ற நாடுகளும் கபாலியைத் திரையிட ஆர்வம் காட்டியுள்ளன.

பெரும்பாலான நாடுகளில் கபாலியின் முதல் காட்சி 21-ம் தேதி மாலை திட்டமிடப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி அறிவிப்புக்கு முன்பே இங்கெல்லாம் சிறப்புக்காட்சிக்கான டிக்கெட்டுகளை அடித்து வைத்தினர்.

நேற்று கலைப்புலி தாணு தேதியை அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

அமெரிக்க வாழ் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். டிக்கெட் விலை குறைந்தது 22 டாலரிலிருந்து 40 டாலர் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

English summary
The premier show tickets of Rajinikanth's Kabali movie sold out with in few hours all over the world.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil