»   »  "பாண்ட் உடம்பும்.. படையப்பா தலையும்".. இது ரசிகர்கள் வேலை!"

"பாண்ட் உடம்பும்.. படையப்பா தலையும்".. இது ரசிகர்கள் வேலை!"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீப நாட்களாக இணையத்தில் ஒரு படம் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அது கபாலிக்காக ரஜினி ரசிகர்கள் செய்த ஒரு உட்டாலக்கிடி டிசைன்.

ஜேம்ஸ்பாண்டின் லேட்டஸ்ட் வர்ஷனான ஸ்பெக்டர் படத்தில் 007 ஆக வரும் டேனியல் க்ரெய்க் கோட் சூட், கையில் துப்பாக்கி சகிதம், ஆஸ்டன் மார்டின் காரில் சாய்ந்தபடி சீரியஸாக பார்த்துக் கொண்டிருப்பார். அந்தக் காட்சி புகைப்படமாகவும் வெளியானது.


Kabali Rajini morphed in 007's Spectre design

உடனே ரஜினி ரசிகர்கள் சும்மா இருப்பார்களா... அப்படியே டேனியல் க்ரெய்க்கின் தலையைத் 'திருகி' எடுத்துவிட்டு, அந்த உடம்பில் கபாலி ரஜினியின் தலையைப் பொருத்திவிட்டார்கள்.


அந்த உடம்புக்கு ரஜினி தலை மிகக் கச்சிதமாகப் பொருந்தியுமிருந்தது. அந்த டிசைனில் கபாலியின் தலைப்பு, டெக்னீஷியன் பெயர்களை போட்டோஷாப்பில் அடித்து வெளியிட, வைரலாகப் பரவியது படம்.


ஆரம்பத்தில் பலரும் இது கபாலிக்கான ஒரிஜினல் டிசைனோ என நினைத்துவிட, அட அப்படியெல்லாம் இல்லீங்க.. இது ஜேம்ஸ்பான்ட் படத்தை காப்பி பண்ணி ரசிகர்கள் பண்ண வேலைங்க என சமூக வலைத் தளங்களில் இரு படங்களையும் ஒப்பிட்டு மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர்.

English summary
Some hardcore fans of Rajinikanth have morphed the actors Kabali getup in Jamesbond 007's Spectre design.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil