»   »  பரியேறும் பெருமாள்... தயாரிப்பாளர் ஆனார் இயக்குநர் பா ரஞ்சித்!

பரியேறும் பெருமாள்... தயாரிப்பாளர் ஆனார் இயக்குநர் பா ரஞ்சித்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'அட்டகத்தி' படமூலம் சிறந்த இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இரண்டாவது படமாக 'மெட்ராஸ்' படத்தில் தன்னை மீண்டும் சிறந்த இயக்குநர் என்று நிரூபித்துக்கொண்டார். மூன்றாவது படமாக ரஜினி நடித்த 'கபாலி' - மூலம் உலகம் முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்டார். அதுமட்டுமல்ல.. யாருக்கும் அத்தனை சுலபத்தில் கிடைக்காத வாய்ப்பாக ரஜினியின் அடுத்த படத்தையும் இவரே இயக்குகிறார்.

Kabali Ranjith turns producer

இவர் இப்பொழுது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். 'நீலம்' புரொடக்ஷன் என்று பெயரிட்ட இப்பட நிறுவனம் மூலம் 'பரியேறும் பெருமாள்' (PARIYERUM PERUMAL) என்ற புதிய படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் மாரி செல்வராஜ். இவர் இயக்குநர் ராமிடம் 'கற்றதுதமிழ்', 'தங்கமீன்கள்', 'தரமணி' ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. லவ், ஆக்ஷன், என எல்லா தரப்பு ரசிகர்களை கவரும் விதமாகவும் கதை அமைந்துள்ளது.

இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் நாயகனாக நடிக்கிறார். 'கிருமி' படம் மூலம் பரவலாக அறியப்பட்டவர் கதிர். இவருக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

ஜனவரி மாத இறுதியில் படபிடிப்பு ஆரம்பமாகிறது.

Read more about: ranjith, ரஞ்சித்
English summary
Kabali fame director Ranjith has turned as producer through Pariyerum Perumal movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil