»   »  2 கோடியைத் தாண்டியது ரஜினியின் கபாலி டீசர்

2 கோடியைத் தாண்டியது ரஜினியின் கபாலி டீசர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்தின் கபாலி டீசர் இன்று 2 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனைப் படைத்தது.

இதுவரை எந்த இந்தியப் படமும் ஒரு மாதத்தில் 2 கோடி பார்வைகளைப் பெற்றதில்லை.

கபாலி டீசர் கடந்த மே 1-ம் தேதி யுட்யூப் இணையத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவால் வெளியிடப்பட்டது.

திணறிய யுட்யூப்

திணறிய யுட்யூப்

டீசர் வெளியான சில நொடிகளில் 1 லட்சம் பார்வையாளர்கள் குவிந்ததால் இணையதளமே திணறியது. பார்வை எண்ணிக்கையை உடனுக்குடன் தர முடியவில்லை என்று விளக்கம் கூறிய யுட்யூப் நிர்வாகம், பின்னர் ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்ததாக அறிவித்தது.

சாதனைகள்

சாதனைகள்

இதுவரை யுட்யூபில் எந்தப் படத்துக்கும் இத்தனை வேகமாக ஒரு மில்லியன் பார்வை கிடைத்ததில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் பத்து மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது கபாலி டீசர்.

முதல் டீசர்

முதல் டீசர்

பொதுவாக பத்து மில்லியன் அதாவது ஒரு கோடி பார்வைகளைப் பெற சில வாரங்கள் பிடிக்கும் மற்ற நடிகர்களின் பட டீசர்களுக்கு. ஆனால் மிக வேகமாக பத்து மில்லியனைக் கடந்த முதல் டீசர் கபாலிதான்.

36 நாடுகளில்

36 நாடுகளில்

அதேபோல யுட்யூபில் வெறும் 90 நிமிடங்களில் 1 லட்சம் விருப்பங்களைப் பெற்றதும் இந்த டீசர்தான்.

அதுமட்டுமல்ல, வெளியான முதல் இரு தினங்களில் 36 நாடுகளில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் ட்ரெண்டிங்கில் இருந்தது கபாலி டீசர்.

2 கோடி

2 கோடி

இப்போது டீசர் வெளியாகி 28 நாட்கள் ஆகிவிட்டன. இன்று 20 மில்லியன் அதாவது 2 கோடி பார்வைகளுக்கும் மேல் பெற்று புதிய சாதனைப் படைத்துள்ளது. இந்தியாவில் இத்தனை பார்வைகள் பெற்ற ஒரே டீசர் கபாலிதான். சர்வதேச அளவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

உலக அளவில்

உலக அளவில்

உலக அளவில் அதிக விருப்பங்கள் பெற்ற மூன்றாவது படம் கபாலி டீசர்தான். இதுவரை 4.17 லட்சம் விருப்பங்கள் (லைக்ஸ்) அதற்குக் கிடைத்துள்ளது. முதலிடத்தில் ஸ்டார் வார்ஸும் இரண்டாவது இடத்தில் அவெஞ்சர்ஸும் உள்ளன.

மகிழ்ச்சி

அதேபோல, சர்வதேச அளவில் கடந்த ஒரு மாதமாக, தமிழரல்லாதவர்களால் அதிக அளவில் உச்சரிக்கப்பட்ட இரு தமிழ் வார்த்தைகள் கபாலிடா மற்றும் மகிழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Rajinikanth's Kabali has created a new record by reached 2 cr views in youtube.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil