»   »  கபாலி: ரம்ஜான் ஸ்பெஷலாக ஜூலையில் வெளியாகிறது!

கபாலி: ரம்ஜான் ஸ்பெஷலாக ஜூலையில் வெளியாகிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் கபாலி திரைப்படம் வரும் ஜூலையில் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகவிருக்கிறது.

பா ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. ஏராளமான புதிய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.


Kabali to release as Ramjan Special

இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. சமீபத்தில் ரஜினிகாந்த் இந்தப் படத்தின் டப்பிங்கில் பங்கேற்று பேசி முடித்தார்.


படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுவரை ஜூன் மாதம் இந்தப் படம் வெளியாகிவிடும் என்று கூறி வந்தனர். ஆனால் இப்போது படம் வெளியாகும் தேதி மாறியுள்ளது.


ஒரு மாதம் தாமதமாகவே இந்தப் படம் வெளியாகும் என்று தெரிகிறது.


கபாலி ரிலீஸ் குறித்து கலைப்புலி தாணு கூறுகையில், "படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்துவிட்டன. அடுத்து சென்சாருக்கு அனுப்பவிருக்கிறோம். இந்த சென்சார் வேலை முடிந்த பிறகுதான் படம் வெளியாகும் தேதி நிச்சயமாகும்," என்று தெரிவித்துள்ளார்.


ஜூன் மாதம்தான் ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் எந்தப் பெரிய புதிய படங்களும் வெளியாகாது. எனவே ஜூன் தொடங்கி, அடுத்த நாற்பது நாள் கழித்த பிறகுதான் பெரிய படங்கள் வெளியாகும்.


எனவே ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் கபாலி வெளியாகும் என்று திரைத் துறையினர் எதிர்ப்பார்க்கிறார்கள்.

English summary
Rajinikanth's Kabali movie has expected to release in coming July second week.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil