»   »  கபாலி ரிலீஸ் எப்போ?

கபாலி ரிலீஸ் எப்போ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

யுட்யூபில் 12 மில்லியன் பார்வைகளைத் தொடப் போகிறது ரஜினியின் கபாலி டீசர். இதன் மூலம் அனைத்து இந்தியப் படங்களின் சாதனைகளையும் முறியடித்துள்ளது.

அடுத்து படம் எப்போது வெளியாகப் போகிறது என்று ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.


இந்தப் படத்தை எந்த சிக்கலுமின்றி பாதுகாப்பாக வெளியிட வேண்டும் என்பதில் தாணு கவனமாக இருக்கிறார்.


நேரடியாக ரிலீஸ்

நேரடியாக ரிலீஸ்

முன்பு மாதிரி இந்தப் படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் தியேட்டர்களுக்கு தரப்போவதில்லையாம். தாணுவே நேரடியாக வெளியிடப் போவதாகக் கூறப்படுகிறது.


ரஜினி பெயரை இழுக்கக் கூடாது

ரஜினி பெயரை இழுக்கக் கூடாது

இதன் மூலம் லாபம் நஷ்டம் எதுவாக இருந்தாலும் அது தாணுவோடு நின்றுவிடும், தேவையின்றி ரஜினி பெயரை இழுக்க மாட்டார்கள் என்பதால் இப்படி ஒரு முடிவு என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்.


சரி எப்போது ரிலீஸ்?

சரி எப்போது ரிலீஸ்?

ஜூலை மாதம்தான் வெளியிடப்போவதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இப்போது ஓரிரு வாரங்கள் முன்பாக, ஜூன் இறுதி வாரத்தில் படம் வெளியாகப் போவதாக தியேட்டர் வட்டாரத்தில் பரபரக்கிறார்கள். சில தியேட்டர்கள் இந்தப் படத்துக்காக புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.


ஆடியோ எப்போது?

ஆடியோ எப்போது?

மே மாத இறுதியில் மலேசியாவில் கபாலி ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்கும் என்று தெரிகிறது.


English summary
Sources says that Rajinikanth's Kabali movie may be released in the last of June.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil