»   »  கபாலி ரிலீஸ் தேதி எப்போ? ஜூலை 1-ம் தேதி 'கன்பர்ம்' பண்றாங்க!

கபாலி ரிலீஸ் தேதி எப்போ? ஜூலை 1-ம் தேதி 'கன்பர்ம்' பண்றாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரண்டு சினிமா ரசிகர்கள் சந்தித்துக் கொண்டால் முதலில் கேட்பது கபாலி ரிலீஸ் எப்போ என்ற கேள்விதான். அந்த அளவுக்கு 'டாக் ஆஃப் தி இன்டஸ்ட்ரி' ஆக இருக்கிறது ரஜினியின் கபாலி.

ஆரம்பத்தில் ஜூலை முதல் தேதி படத்தை வெளியிடலாம் என்று திட்டமிட்டனர். மீடியாவிலும் இதுதான் அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.


ரம்ஜான்

ரம்ஜான்

ஆனால் ரம்ஜான் நோன்பு முடிவது ஜூலை 6-ம் தேதிதான். அதற்கு முன்பாக படத்தை வெளியிட்டால் ரஜினியின் இஸ்லாமிய ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள் என்று தயாரிப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக மலேசியா, வளைகுடா நாடுகளில் தமிழகத்துக்கு இணையாக ரஜினி படங்கள் கொண்டாடப்படுகின்றன.


ஜூலை 15?

ஜூலை 15?

எனவே 6-ம் தேதிக்குப் பிறகு வெளியிட்டால் ஓபனிங் இன்னும் பிரமாண்டமாக இருக்கும் என்று தாணுவிடம் சொல்லப்பட்டது. எனவே இப்போது ஜுலை 15 அன்று வெளியாகும் எனத் தெரிகிறது.


செய்தியாளர் சந்திப்பில்

செய்தியாளர் சந்திப்பில்

இதனை உறுதி செய்வதற்காக ஜுலை 1 அன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த சந்திப்பில் ரஜினி தவிர்த்து, கபாலி படக்குழுவினர் அனைவரும் ஆஜராகி படத்தைப் பற்றி பேசவுள்ளனர்.


படத்தின் ஆடியோ வெளியீட்டை சிம்பிளாக முடித்துக்கொண்டதால் இந்த ஏற்பாடு. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரிலீஸ் தேதி ஜுலை 15 என்பது அறிவிக்கப்படலாம்.தெரிஞ்சதுதான்

தெரிஞ்சதுதான்

இந்தத் தேதி (சூலா 15) இன்னொரு வகையில் ஏற்கெனவே உறுதிப்படுத்தப்பட்டதுதான். இந்தத் தேதியில்தான் கபாலி முதல் காட்சிக்காக சிறப்பு விமானத்தை இயக்கவிருக்கிறது ஏர் ஏசியா.


English summary
Rajinikanth's Kabali release date will be confirmed on July 1st in a press meet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil