»   »  தமிழ், தெலுங்கு, இந்தி, மலாயில் ஒரே நேரத்தில் வெளியாகும் கபாலி!

தமிழ், தெலுங்கு, இந்தி, மலாயில் ஒரே நேரத்தில் வெளியாகும் கபாலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்தின் கபாலி படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலாய் மொழிகளில் அடுத்த மாதம் வெளியாகிறது.

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன.


தமிழ்ப் பதிப்புக்கு மட்டும் ரஜினி டப்பிங் பேசி முடித்துவிட்டு அமெரிக்கா பயணமாகியுள்ளார்.


சென்சார்

சென்சார்

கபாலி படத்தின் தமிழ் பதிப்புக்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ளன. எனவே அடுத்த வாரம் படத்தை தணிக்கைக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து தெலுங்கு, இந்தி, மலாய் மொழிகளில் கபாலி படம் தணிக்கை செய்யப்படுகிறது.


ஜூலை 15

ஜூலை 15

அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி கபாலி படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரம்ஜான் காரணமாக இரண்டு வாரம் தள்ளிப்போகிறது. அநேகமாக ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என்கிறார்கள்.


சென்னை திரும்பும் ரஜினி

சென்னை திரும்பும் ரஜினி

ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து இந்த மாதம் இறுதியில் சென்னை திரும்ப இருப்பதாகவும் அவர் வந்த பிறகு கபாலி வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் இன்னொரு தரப்பில் கூறுகிறார்கள்.


2 மாதங்கள் கழித்து...

2 மாதங்கள் கழித்து...

தமிழ், தெலுங்கு, இந்தி, மலாயில் வெளியாகும் கபாலி, இரு மாதங்களுக்குப் பிறகு சீனா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.


English summary
Rajinikanth's Kabali movie will be released simultaneously in Tamil, Telugu, Hindi and Malayalam languages.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil