»   »  தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!

தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா ஹிட் படமான கபாலி, தாய்லாந்து மொழியில் 100-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது.

கலைப்புலி தாணு தயாரிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் கபாலி. ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வசூலை உலகெங்கும் குவித்து பெரும் வெற்றியைப் பெற்றது இந்தப் படம்.

Kabali to release in Thai language on Jan 5th

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் வெளியானது. மூன்று மொழிகளிலுமே இது வெற்றிப் படம்தான்.

ஒரு வாரம் கழித்து மலாய் மொழியில் டப் செய்யப்பட்டு மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் 600-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது கபாலி. இன்று வரை மலேசியாவில் அதிக வசூல் குவித்த ஒரே ஆசிய திரைப்படம் கபாலிதான்.

கபாலியை தாய், ஜப்பான் மற்றும் சீன மொழிகளில் டப் செய்து வெளியிடப் போவதாக முன்பு கலைப்புலி தாணு அறிவித்திருந்தார்.

Kabali to release in Thai language on Jan 5th

இப்போது முதல் கட்டமாக கபாலியின் தாய்லாந்து மொழிப் பதிப்பை வரும் ஜனவரி 5-ம் தேதி வெளியிடவிருக்கிறார்.

தாய்லாந்தில் 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கபாலி வெளியாகவிருக்கிறது. தாய் மொழியில் டப் செய்யப்பட்டு இத்தனை அரங்குகளில் வெளியாகும் ஒரே இந்தியப் படம் கபாலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலி தாய்லாந்து வெளியீட்டை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் உறுதி செய்துள்ளார்.

English summary
The Thai version of Superstar Rajinikanth's mega hit Kabali will be released on Jan 5, 2017.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil