»   »  உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் ரஜினியின் 'கபாலி'.. சீனாவிலும் வெளியாகிறது?

உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் ரஜினியின் 'கபாலி'.. சீனாவிலும் வெளியாகிறது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் இந்தியாவில் மட்டும் 2000 தியேட்டர்களில் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கபாலி ஜூலை 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ரஜினி கேங்க்ஸ்டர் வேடத்தில் நடித்திருப்பது, ரஞ்சித் இயக்கம் போன்றவை ரஜினி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளன.


Kabali Released 3000 Screens in Worldwide

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரை இதுவரை 2 கோடிக்கும் அதிகமான பேர் இணையத்தில் பார்த்து ரசித்துள்ளனர்.


இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில், 2000க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கபாலி' வெளியாகவிருக்கிறது.


இதுதவிர உலகம் முழுவதும் இப்படத்தை 3000க்கும் அதிகமான தியேட்டர்களில் படக்குழு வெளியிடவிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 800 க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது.


சீனாவில்


சீனாவிலும் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். சீனாவில் 4800 அரங்குகளில் படத்தை வெளியிடப போவதாக அவர் கூறியுள்ளார்.


சமீபத்தில் வெளியான தகவல்களின் படி மே 28 ம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியீடு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

English summary
Sources Said Rajini's Kabali Released 3000 Screens in Worldwide.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil