»   »  கபாலியை முதன்முதலில் பார்க்கப்போகும் ரசிகர்கள் யார் தெரியுமா?

கபாலியை முதன்முதலில் பார்க்கப்போகும் ரசிகர்கள் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் வரும் 22ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கபாலி. டீசர், பாடல் என ஏற்கனவே எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.


Kabali's first premiere to be held in Malaysia

அடுத்தவாரம் இப்படம் ரிலீசாக இருக்கிறது. முதல் நாள் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுகள் படம் வெளியாகும் அனைத்து நாடுகளிலும் சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்து விட்டன. அப்படிப் படத்தைப் பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில் உலகம் முழுவதும் ரிலீசாகும் இப்படத்தை முதலில் எந்த நாட்டு ரசிகர்கள் பார்க்க இருக்கிறார்கள் என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.


அதாவது கபாலி படத்தின் உலகளவிலான முதல் காட்சி மலேசியாவில் நடைபெற உள்ளது என்று அயங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது. 21-ம் தேதி மலேசிய நேரம் இரவு 9 மணிக்கு (இந்திய நேரம் மாலை 6.30) கபாலியின் முதல் காட்சி நடைபெற உள்ளது.


இதுதவிர கபாலி படத்தின் பிரீமியர் என்கிற சிறப்புக் காட்சி ஜூலை 21 அன்று பாரிஸில் உள்ள ரெக்ஸ் சினிமாஸில் இரவு 8.30 மணி அளவில் திரையிடப்படவுள்ளது. பாரிஸில் உள்ள இந்தத் திரையரங்கம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அரங்கம் ஆகும். இங்கு ஒரே சமயத்தில் 2800 அமர்ந்து படம் பார்க்கமுடியும்.


இந்தத் திரையரங்கத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் கபாலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kabali's premiere will be held on 21 July 2016 at a popular cinema hall, NU Central, Mid Valley in Malaysia.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil