»   »  சென்னையில் கபாலியின் புதிய வசூல் சாதனை... 10 நாட்களில் பத்து கோடி!

சென்னையில் கபாலியின் புதிய வசூல் சாதனை... 10 நாட்களில் பத்து கோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை நகரில் மட்டும் பத்து நாட்களில் ரூ 10 கோடிகளைக் குவித்து புதிய வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது ரஜினிகாந்தின் கபாலி திரைப்படம்.

கபாலி படத்தை சென்னையில் எஸ்பிஐ (சத்யம் சினிமா) வாங்கி வெளியிட்டது. ரூ 6.5 கோடிக்கு இந்தப் படத்தை விற்றிருந்தார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.


Kabali's record collection in Chennai

படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூபாய் நான்கு கோடிகளுக்கும் மேல் இந்தப் படம் வசூலித்தது. எந்தப் படத்துக்கும் கிடைக்காத மிகப் பெரிய ஓபனிங் இது.


நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் படம் வெளியாகி பத்தாவது நாட்களாகின்றன. இந்த பத்து நாட்களில் ரூ 9.98 கோடிகளை சென்னை நகரில் மட்டும் இந்தப் படம் குவித்துள்ளது. மேலும் ரூ 4 - 5 கோடிகள் வரை சென்னையில் இந்தப் படம் வசூலிக்கும் வாய்ப்புள்ளதாக பாக்ஸ் ஆபீஸில் கணித்துள்ளனர்.


வார நாட்களில் கபாலி காட்சிகள் எண்ணிக்கை மற்ற படங்களுக்காக ஓரளவு குறைக்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் அதிகரிக்கப்படுகிறது.

English summary
Rajinikanth's Kabali has grossed Rs 10 cr in 10 days in Chennai city.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil