»   »  "கபாலி டே"... ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள்... புதிய சாதனை!

"கபாலி டே"... ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள்... புதிய சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் கபாலி பட முதல் டீசர் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

இந்த டீசர் இன்று காலை வெளியான அடுத்த பத்து நிமிடங்களில் 1 லட்சம் பேர் பார்த்திருந்தனர். ஆனால் யுட்யூபில் இந்த எண்ணிக்கை காட்டப்படவில்லை. காரணம், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்ததால், பார்வையாளர் எண்ணிக்கையை சரிவர கணக்கெடுக்க முடியவில்லை என்றும், விரைவில் இதுகுறித்து அப்டேட் செய்யப்படும் என்றும் யுட்யூப் தெரிவித்ததாக கலைப்புலி தாணு கூறியுள்ளார்.


Kabali sets a new record: One Million views in just 1 hour!

இந்த நிலையில் முதல் ஒரு மணி நேரத்தில் கபாலி டீசரை 10 லட்சம் பேர், அதாவது 1 மில்லியன் பேர் பார்வையிட்டதாக கலைப்புலி தாணு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பேர் ஒரு படத்தின் டீசரைப் பார்த்தது இணையத்தில் புதிய சாதனை. இதுவரை இந்தியாவில் எந்தப் படத்தின் டீசரையும் இவ்வளவு வேகமாக பத்து லட்சம் பேர் பார்த்ததில்லை.


அதேபோல டீசர் வெளியான இரண்டு மணி நேரத்தில் 1.20 லட்சம் லைக்குகள் கிடைத்தன. இதுவும் புதிய சாதனை என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.


"இன்று மாலைக்குள், கபாலியின் டீசரை எத்தனை மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என்று தாணு தெரிவித்துள்ளார்.

English summary
Kalaipuli Thaanu, Producer of Rajinikanth's Kabali has revealed that the teaser of the movie got 10 lakhs views with in one hour from its release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil