»   »  ரூ 13 கோடி... அமெரிக்கா - கனடாவில் கபாலி பிரிமியர் காட்சி வசூலில் புதிய சாதனை!

ரூ 13 கோடி... அமெரிக்கா - கனடாவில் கபாலி பிரிமியர் காட்சி வசூலில் புதிய சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் கபாலி திரைப்படம் பிரிமியர் எனும் சிறப்புக் காட்சி வசூலில் ரூ 13 கோடி வசூலித்து புதிய சாதனைப் படைத்துள்ளது. இதுவரை வேறு எந்த இந்தியப் படமும் பிரிமியர் காட்சியில் இவ்வளவு தொகையைக் குவித்ததில்லை.

கபாலி படம் உலகெங்கும் 5000-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது. உலகின் பல நாடுகளில் ஒரு நாள் முன்பாகவே படத்தின் பிரிமியர் காட்சி நடந்தது.


கட்டணம்

கட்டணம்

இந்தக் காட்சிகளுக்கு சிறப்புக் கட்டணமாக 25 டாலர்களிலிருந்து 40 டாலர்கள் வரை கட்டணம் நிர்ணயித்திருந்தனர்.


ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் இந்தக் காட்சியைப் பார்க்க பெரும் ஆர்வம் காட்டினர். அரங்கு நிறைந்த காட்சிகளா சிறப்புக் காட்சிகள் நடந்தன.
அமெரிக்காவில் சாதனை

அமெரிக்காவில் சாதனை

இந்த ஒரு காட்சி மூலம் மட்டுமே அமெரிக்கா மற்றும் கனடாவில் கபாலி ரூ 13 கோடியை வசூலித்துள்ளது. இதுவரை வேறு எந்தப் படமும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை. அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் இது பெரும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.


பிரிட்டனில்...

பிரிட்டனில்...

பிரிட்டன், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் பிரிமியர் காட்சிகள் நடந்துள்ளன. இவற்றின் வசூல் நிலவரம் இன்னும் வெளிவரவில்லை.


English summary
Rajinikanth's Kabali sets a new record in premier show collection with Rs 13 cr in US alone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil