»   »  கபாலிடா... நெருப்புடா... நிஜமாவே தீபாவளிக்கு "வெடிக்க"ப் போகுதுடா!

கபாலிடா... நெருப்புடா... நிஜமாவே தீபாவளிக்கு "வெடிக்க"ப் போகுதுடா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் தீபாவளிக்கு ரஜினி படம் போட்ட கபாலி பட்டாசுகள் விற்பனைக்கு வர உள்ளன. சிவசாசிப் பகுதியில் இந்தப் புதிய பட்டாசுகளைத் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்த கபாலி படம் தற்போது திரையரங்குகலில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா, ரித்விகா உள்பட பலர் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தைத் தயாரித்துள்ளார்.


Kabali special crackers for Diwali

கபாலி பட ரிலீசை ரஜினி ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து திருவிழா போல் கொண்டாடினர்.


இந்நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு மற்றொரு பட்டாசு செய்தி கிடைத்திருக்கிறது. அதாவது வரும் தீபாவளிக்கு கபாலி பெயரில் புதிய பட்டாசுகளை விற்பனைக்கு கொண்டு வர வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


தற்போது கபாலி பட்டாசுகள் தயாரிப்பு பணி சிவகாசிப் பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பட்டாசுகளுக்கு கபாலி புகழ் வசனங்களான 'நெருப்புடா' என்றும், மத்தாப்புகளுக்கு 'மகிழ்ச்சி' என்றும் பெயர் வைத்துள்ளார்களாம்.


எனவே, கபாலி வசூலைப் போலவே இந்தாண்டு பட்டாசுகளின் விற்பனையும் அமோகமாக இருக்கும் என்பது விற்பனையாளர்களின் எதிர்பார்ப்பு.

English summary
The fireworks merchants are introducing Kabali crackers for this year Diwali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil