»   »  'கபாலி' ரஜினியை வச்சு செஞ்ச மொட்ட ராஜேந்திரன்! #Maduraveeran

'கபாலி' ரஜினியை வச்சு செஞ்ச மொட்ட ராஜேந்திரன்! #Maduraveeran

Posted By:
Subscribe to Oneindia Tamil
மதுர வீரன் படத்தில் விஜய் உள்ளாரா.. எப்படி ?

சென்னை : ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், மீனாட்சி, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியாகியிருக்கும் திரைப்படம் 'மதுரவீரன்'.

'மதுரவீரன்' திரைப்படம் ஜல்லிக்கட்டையும், அதன் பின்னணியில் நிகழும் அரசியலையும், சாதி மோதல்களையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

'மதுரவீரன்' படத்தில் ரஜினியின் 'கபாலி' திரைப்படத்தை மொட்டை ராஜேந்திரனை வைத்து ஸ்பூஃப் செய்திருக்கிறார்கள்.

மதுரவீரன்

மதுரவீரன்

சண்முக பாண்டியன் நடித்திருக்கும் 'மதுரவீரன்' படத்தில் அவருக்குப் பெண் பார்ப்பதற்காக ஒரு வீட்டுக்குச் செல்வார்கள். அது மொட்டை ராஜேந்திரனின் வீடு. மலேசியாவில் இருந்து வந்த மாப்பிள்ளை சண்முக பாண்டியனை வரவேற்பதற்காக 'கபாலி' ரஜினி கெட்டப்பில் இருப்பார்கள் வீட்டில் இருப்பவர்கள்.

கபாலி ரஜினி

கபாலி ரஜினி

மொட்டை ராஜேந்திரன் கபாலி ரஜினியை போல கோட் சூட் போட்டுக்கொண்டும், அவரது இரண்டாவது மகள் 'யோகி' தன்ஷிகாவை போல கிராப் ஹேர்ஸ்டைலிலும் இருப்பார்.

கபாலி காமெடி

கபாலி காமெடி

அதற்கு முன்பே ஒரு காட்சியில் மலேசியாவில் இருந்து வந்திருப்பதால் சண்முகபாண்டியனிடம், என்ன உடம்புல படமெல்லாம் வரையலையா எனக் கேட்பார் ஒருவர். அதற்கு சண்முக பாண்டியன் "மலேசியாவுக்கு போனா உடம்புபூராம் படம் வரையணுமா? நான் வேட்டிதான் கட்டுவேன்" என டயலாக் பேசுவார்.

கபாலி ஸ்பூஃப்

கபாலி ஸ்பூஃப்

அதோடு, விடாமல் கபாலியை அப்படியே ஸ்பூஃப் செய்து ரசிகர்களை கொலையாய்க் கொல்வார் மொட்ட ராஜேந்திரன். மொட்டை ராஜேந்திரனோடு கூலிங் கிளாஸ் மாட்டிக்கொண்டு 'கபாலி' படத்தில் அட்டக்கத்தி தினேஷ் போல ஒருவர் வழியை கிளீயர் செய்துகொண்டே வருவார்.

கபாலி மாஸ் டயலாக்

கபாலி மாஸ் டயலாக்

'கபாலி' படத்தில் ரஜினி பேசும் மாஸ் டயலாக்கான "பறவைய பறக்கவிடு, வாழ்றதா சாகுறதானு அது முடிவு பண்ணட்டும்.. உன்னோட கருணை சாவைவிட மோசமானது" டயலாக்கை மொட்ட ராஜேந்திரன் பேசியிருக்கிறார்.

காமெடியாகிப்போன மாஸ் டயலாக்

காமெடியாகிப்போன மாஸ் டயலாக்

ஆனால், இந்தப் படத்தில் அந்தப் பறவை கோழியாக காட்டப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் 'கபாலி' யை புரட்டி எடுத்து விட்டார்கள். பாவம், டைரக்டருக்கு கபாலி மேல என்ன கோவமோ தெரியலை என ரசிகர்களே புலம்பும்படி ஆகிவிட்டது.

English summary
In 'MaduraVeeran' movie, Rajini's 'Kabali' has been spoofed by Motta Rajendran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil