»   »  நான் வர்றேன்னு சொல்லு.. ஜூலை 7ம் தேதி வர்றேன்னு சொல்லு.. நச்சுன்னு ஒரு விளம்பரம்

நான் வர்றேன்னு சொல்லு.. ஜூலை 7ம் தேதி வர்றேன்னு சொல்லு.. நச்சுன்னு ஒரு விளம்பரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: "எல்லாம் ஒரு விளம்பரம்.. என்னடா விளம்பரம்.. அந்த சினிமாக்காரங்கதான் விளம்பரம் பண்றாங்கன்னா".. இது கரகாட்டக்காரன் பட வசனம். இன்று விளம்பரம் இல்லாவிட்டால் எதுவுமே போணியாகாது என்ற நிலை.

அதுவும் டைமிங்காக விளம்பரம் செய்வது ஒரு கலை. அதை சரியாகப் பயன்படுத்துவோர் சக்ஸஸ் ஆகின்றனர். அப்படி ஒரு விளம்பரம் இன்று நமது கண்ணில் பட்டது.

Kabali style advt for the ATTI film

அட்டி என்ற படத்தின் விளம்பரம்தான் அது. மொட்டை ராஜேந்திரன் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் அந்தப் பட விளம்பரத்தின் வாசகம்தான் நம்மை ரசிக்க வைத்தது. "நான் வர்றேன்னு சொல்லு.. ஜூலை 7ம் தேதி வர்றேன்னு சொல்லு" என்ற வாசகத்துடன் அட்டகாசமாக காணப்பட்டது அந்த விளம்பரம்.

கபாலி படத்தின் பிரபல வசனத்தையே தனது விளம்பர வாசகமாக வைத்து விட்டது அட்டி படக்குழு. கூடவே மொட்டை ராஜேந்திரனின் கெட்டப் வேறு அட்டகாசம். மொத்தத்தில் இந்த விளம்பரம், அட்டிக்கு நல்ல பிரபலத்தைக் கொடுத்து விட்டது என்பதில் ஐயமில்லை.

இதில் என்ன காமெடி என்றால் இப்படத்தின் நாயகன் மொட்டை ராஜேந்திரன் கிடையாது.. மாகாபாதான். ஆனால் படத்தில் யாரு கலக்கியிருப்பார் என்பதை இந்தப் பட விளம்பரத்தை வைத்தே புரிந்து கொள்ள முடிகிறது.

சூபர்பா!

English summary
The ATTI movie team have released a new advertisement based on Rajini's Kabali movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil