»   »  கபாலி டீசர்: சூர்யாவுடன் இணையும் ரஜினி?

கபாலி டீசர்: சூர்யாவுடன் இணையும் ரஜினி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: '24' படத்தின் இடைவேளையில் கபாலி டீசரை வெளியிட தாணு திட்டமிட்டிருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் '24' மே 6 ம் தேதி வெளியாகிறது. சூர்யா 3 கெட்டப்புகளில் நடித்திருப்பதால் இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.


Kabali Teaser along with Suriya's 24

மற்றொருபுறம் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 'கபாலி' படத்தின் டீசர் மே 1ல் வெளியாகிறது. உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீசரை இயக்குநர் ரஞ்சித் வெளியிடுகிறார்.


இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தாணு, சூர்யாவின் '24' படத்துடன் 'கபாலி' டீசரை இணைத்து வெளியிடவிருப்பதாகக் கூறுகின்றனர்.


முன்னதாக விஜய்யின் 'தெறி' படத்துடன் 'கபாலி' டீசர் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியானது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் 'தெறி'யுடன் 'கபாலி' டீசர் வெளியாகவில்லை.


தற்போது டீசர் தேதி உறுதியாகி விட்டதால் '24' படத்துடன் 'கபாலி' டீசர் வெளியாவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று கூறுகின்றனர்.


'கபாலி' போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் சென்சாருக்கு செல்லவிருக்கிறது.

English summary
Sources Said Rajini's Kabali Teaser to be Attached with Suriya's 24.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil