»   »  "ஐ" சாதனையை ஜஸ்ட் லைக் தட் முறியடித்த "கபாலி"!

"ஐ" சாதனையை ஜஸ்ட் லைக் தட் முறியடித்த "கபாலி"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐ படத்தின் 2 வருட டீசர் ஹிட்ஸை முறியடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது கபாலி டீசர்.

பிரமாண்ட இயக்குநர் என்று பெயரெடுத்த ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2014 ம் ஆண்டு 'ஐ' டீசர் வெளியானது. விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான இந்த டீசரில் உடலை ஏற்றி, இறக்கி விக்ரம் மிரள வைத்திருந்தார்.

Kabali Teaser Beats I Life time Record

கடந்த 2014 ம் ஆண்டு வெளியான 'ஐ' டீசரை இதுவரை 1,13, 63,224 பேர் இணையத்தில் பார்த்து ரசித்துள்ளனர். இதுவரை தென்னிந்தியாவில் அதிகம் பார்த்து ரசித்த டீசர் என்ற பெருமையை 'ஐ' டீசர் தக்க வைத்திருந்தது.

இந்நிலையில் 'ஐ' படத்தின் 2 வருட சாதனையை 'கபாலி' டீசர் தற்போது முறியடித்துள்ளது.கடந்த 1ம் தேதி வெளியான 'கபாலி' டீசரை இதுவரை 1,18,54,582 பேர் இணையத்தில் பார்த்து ரசித்துள்ளனர்.

இதன்மூலம் 'ஐ' படத்தின் 2 வருட சாதனையை 'கபாலி' டீசர் 5 நாட்களில் முறியடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.

இதுதவிர ஒரேநாளில் அதிகம் பேரால் பார்த்து ரசிக்கப்பட்ட டீசர், உலக அளவில் அதிக லைக்குகள் குவித்த டீசர் போன்ற பெருமைகளையும் கபாலி டீசர் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

English summary
Rajini's Kabali Teaser Beats I Teaser's Life time Record.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil