»   »  8.2 மில்லியன்... 'கான்'களைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவில் முதலிடம் பிடித்தது ரஜினியின் 'கபாலி'!

8.2 மில்லியன்... 'கான்'களைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவில் முதலிடம் பிடித்தது ரஜினியின் 'கபாலி'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷாரூக்கான், சல்மான்கான் படங்களின் டீசர் சாதனைகளையெல்லாம் 'ஜஸ்ட் லைக் தட்' முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது ரஜினியின் கபாலி டீசர்.

கடந்த 1 ம் தேதி வெளியான கபாலி டீசர் நாள்தோறும் பல்வேறு புதிய சாதனைகளை படைத்து வருகிறது.


இந்நிலையில் மற்றுமொரு சிறப்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாரூக்கான், சல்மான்கான் படங்களின் வரலாற்றை கபாலி டீசர் முறியடித்திருக்கிறது.


50 லட்சம்

50 லட்சம்

கபாலி டீசர் வெளியான முதல் நாளில் சுமார் 50 லட்சம் பேர் இந்த டீசரை யூ-டியூப் தளத்தில் பார்த்து ரசித்தனர். இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்தின் டீசரையும் இவ்வளவு ரசிகர்கள் முதல்நாளில் பார்த்து ரசித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஒரேநாளில் அதிகம் பார்வைகளைப் பெற்ற முதல் இந்திய டீசர் என்ற பெருமையை கபாலி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.


ஷாரூக்கான்

ஷாரூக்கான்

முதல் நாளில் அதிக பார்வைகளைப் பெற்ற இந்திய டீசர்களில் ஷாரூக்கானின் தில்வாலே 36 லட்சம் பார்வைகளுடன் 2 வது இடத்தையும், சல்மானின் சுல்தான் 31 லட்சம் பார்வைகளுடன் 3 வது இடத்தையும் பிடித்திருக்கிறது. 30.8 லட்சம் பார்வைகளுடன் 4 வது இடத்தை சல்மானின் பிரேம் ரத்தன் தான் பாயோ டீசரும், 30.4 லட்சம் பார்வைகளுடன் ஷாரூக்கானின் ஹேப்பி நியூ இயர் டீசர் 5 வது இடத்தையும் பிடித்திருக்கிறது.


சிக்ஸ்பேக்

சிக்ஸ்பேக்

சிக்ஸ்பேக், குத்துப்பாடல், விஎப்எக்ஸ் காட்சிகள், புரோமோஷன் என எதுவுமின்றி கபாலி டீசர் இந்த சாதனையைப் படைத்திருப்பது வட இந்திய ரசிகர்கள் ,மற்றும் ஊடகங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் ரஜினிகாந்த் ஒருவரால் மட்டுமே இத்தகைய சாதனையைப் படைக்க முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளனர்.


2 நாட்களில்

2 நாட்களில்

2 நாட்கள் முடிவில் 82 லட்சம் பார்வைகளையும், 2.90 லட்சம் லைக்குகளையும் கபாலி டீசர் பெற்றிருக்கிறது. இன்று ஒரு கோடியைத் தொட்டுவிடும் வாய்ப்புள்ளது.


வரும் நாட்களில் மேலும் பல சாதனைகளை இந்த டீசர் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.English summary
Rajini's Kabali Teaser Breaks All Khan's Records in Indian Cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil