»   »  கபாலி டீசர்: ரஜினி ரசிகர்களை மகிழ்வித்த ரஞ்சித்

கபாலி டீசர்: ரஜினி ரசிகர்களை மகிழ்வித்த ரஞ்சித்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி டீசர் விரைவில் வெளியாகும் என்று இயக்குநர் ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி.


அட்டக்கத்தி, மெட்ராஸ் என்று 2 படங்களை மட்டுமே இயக்கிய ரஞ்சித், ரஜினியை முதன்முறையாக இயக்குவதால் கபாலி மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Kabali Teaser Coming Soon says Ranjith

மேலும் கேங்க்ஸ்டர் வேடத்தில் ரஜினி நடித்திருக்கும் கபாலியை நேரில் தரிசிக்க ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


ஆனால் இப்படத்தின் டீசரை ரஞ்சித் இன்னும் வெளியிடவில்லை. இதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் கோபத்துடன் டீசரை எப்போது வெளியிடுவீர்கள்? என்று ரஞ்சித்திடம் கேட்டனர்.


இதற்கு ரஞ்சித் விரைவில் வருகிறோம் மகிழ்ச்சி என்று பதிலளித்துள்ளார். ரஞ்சித்தின் இந்த பதிலால் ரஜினி ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.


சீக்கிரம் வாங்க கபாலி..

English summary
Kabali Teaser Coming Soon Pa.Ranjith Says in Recent Chat Session.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil