»   »  ரஜினிடா... உலக அளவில் புதிய சாதனை படைத்த "கபாலி" டீசர்!

ரஜினிடா... உலக அளவில் புதிய சாதனை படைத்த "கபாலி" டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 32 ஆயிரம் லைக்குகளைப் பெற்று, புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறது ரஜினியின் கபாலி டீசர்.

ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கபாலி டீசர் நேற்று காலை 11 மணியளவில் வெளியானது.


வெளியான சில மணி நேரங்களில் யூடியூப் இணையதளமே ஸ்தம்பித்துப் போனது. அந்தளவிற்கு உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் கபாலி டீசரை பார்த்து ரசித்தனர்.


கபாலி டீசர்

உழைப்பாளர் தினத்தையொட்டி நேற்று காலை 11 மணியளவில் கபாலி டீசரை படக்குழு வெளியிட்டது. டீசர் வெளியான சிறிது நேரத்தில் #kabaliteaser என்ற ஹெஷ்டேக் தேசியளவிலும் பின்னர் உலகளவிலும் ட்ரெண்டாகத் தொடங்கியது. இதுதவிர #magizhchi, #Neruppuda, #KabaliDa, #மகிழ்ச்சி, #Thalaivar போன்ற ஹெஷ்டேக்குகளும் தேசியளவில் ட்ரெண்டானது. ஒரு டீசருக்காக 6க்கும் மேற்பட்ட ஹெஷ்டேக்குகள் ஒரே நேரத்தில் ட்ரெண்டானது இதுவே முதல்முறை.


யூடியூப்

யூடியூப்

டீசர் வெளியான பின் யூ டியூப் பக்கத்தில் லைக்ஸ்களை மட்டுமே பார்க்க முடிந்தது. பார்வைகளை கணக்கிட முடியாத அளவிற்கு ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கபாலி டீசரை பார்த்து ரசித்தனர். தற்போது டீசர் வெளியாகி முழுதாக 24 மணி நேரம் முடிந்த நிலையில் 50 லட்சம் பார்வைகளையும், 2 லட்சத்து 32 ஆயிரம் லைக்குகளையும் டீசர் பெற்றிருக்கிறது.ஆசியளவில்

ஆசியளவில்

24 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வைகளைக் கடந்ததன் மூலம் ஆசியளவில் புதிய சாதனையை கபாலி டீசர் படைத்திருக்கிறது. இதுவரை எந்த ஒரு இந்தியப் படங்களும் இந்த சாதனையை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில்

உலகளவில்

24 மணிநேரத்தில் 2 லட்சத்து 32 ஆயிரம் லைக்குகளைப் பெற்றதன் மூலம் உலகளவில் கபாலி டீசர் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இதன் மூலம் தமிழ்த் திரையுலகைத் தாண்டி உலகளவிலும் தனது முத்திரையை ரஜினி அழுத்தமாகப் பதித்திருக்கிறார். மேலும் இந்தியத் திரையுலகில் கபாலி டீசரின் ஹிட்ஸ்+ லைக்ஸ் இரண்டையும் முறியடிக்க இன்னும் சில வருடங்கள் ஆகும் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.


English summary
Rajini's Kabali Teaser Creates a new World Record.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil