»   »  22 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வைகள்... புதிய சாதனைப் படைத்தது கபாலி!

22 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வைகள்... புதிய சாதனைப் படைத்தது கபாலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்திய சினிமா வரலாற்றில் வேறு எந்தப் படமும் செய்யாத சாதனையைப் படைத்துள்ளது ரஜினியின் கபாலி டீசர்.

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த டீசர் வெளியாகி முழுமையாக ஒரு நாள் கூட ஆகாத நிலையில் 5 மில்லியன் (50 லட்சம்) பார்வைகளைப் பெற்றுள்ளது.


இந்திய சினிமாவில் இதுவரை எந்தப் படத்தின் டீசர் அல்லது ட்ரைலருக்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை.


ஒரு மணி நேரத்தில்

ஒரு மணி நேரத்தில்

பெரிய பட்ஜெட் படங்களின் டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைப் பெறுவதே கடினம் என்ற இன்றைய சூழலில், ரஜினியின் கபாலி டீசர் வெளியான பத்து நிமிடத்தில் 1 லட்சம் பார்வைகளையும், ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளையும் பெற்றது.


தாணு

தாணு

ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில் கபாலி 4 மில்லியன் பார்வைகள் மற்றும் 2 லட்சம் விருப்பங்களைப் பெற்று மிகப் பெரிய சாதனைப் படைத்திருப்பதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்தார்.


5 மில்லியன்

5 மில்லியன்

இதற்கிடையில் 22 மணி நேரத்துக்குள் இந்த டீசர் 5 மில்லியன் பார்வைகளையும், 2.26 லட்சம் விருப்பங்களையும் பெற்று புதிய சாதனைப் படைத்துள்ளது.


சாதனை

சாதனை

"இந்திய சினிமா என்றல்ல.. சர்வதேச அளவிலும் கூட இந்த எண்ணிக்கை அசாதாரணமானது. மிகப் பெரிய சர்வர், வசதிகளைக் கொண்ட யுட்யூப் இணைய தளமே ஸ்தம்பித்து, 2 மணி நேரத்துக்கு ஒரு முறை பார்வை எண்ணிக்கையை அப்டேட் செய்யும் அளவுக்கு கபாலி டீசர் வரவேற்பு பெற்றுள்ளது," என்கிறார் தயாரிப்பாளர் தாணு.


ரஜினியால் மட்டுமே முடியும்

தனது ட்விட்டர் பக்கத்தில் தாணு மேலும் கூறியிருப்பதாவது: "சாதனைகள் உடைப்பதற்காகத்தான். அதை தனது ஸ்டைலில் செய்து காட்டியிருக்கிறார் டஒன் அன்ட் ஒன்லிட தலைவர். 22 மணி நேரத்தில் 5 மில்லியன்கள்!" என்று குறிப்பிட்டுள்ள தாணு, ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.


English summary
With in 24 hours of its release Rajinikanth's Kabali teaser has got 5 million views in Youtube.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil