»   »  கபாலி டீசர் அஜீத் பிறந்தநாளில் வெளியாகிறதா?

கபாலி டீசர் அஜீத் பிறந்தநாளில் வெளியாகிறதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மே 1 ம் தேதி கபாலி படத்தின் டீசர் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கபாலி' தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்திற்கான டப்பிங் பணிகள் கடந்த 18ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


ரஜினி தன்னுடைய டப்பிங்கை முடித்துக் கொடுத்து விட்ட நிலையில், மற்ற நடிக, நடிகையரின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


Kabali Teaser Released May 1st

இந்நிலையில் மே 1 ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. உழைப்பாளர் தினம் என்பதால் மே 1ல் இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனராம்.


இதனால் டப்பிங் பணிகளுடன் தற்போது டீசர் பணிகளையும் படக்குழுவினர் மேற்கொண்டு வருகிறார்களாம். ரஞ்சித் இயக்கம், ரஜினி-ரஞ்சித் கூட்டணி போன்ற காரணங்களால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகிரித்து வருகிறது.


ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், படத்தின் டீசரும் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Rajini's Kabali Teaser Released May 1st on Labor Day.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil