»   »  தெலுங்கில் கபாலி டீசர் செய்த புதிய சாதனை!

தெலுங்கில் கபாலி டீசர் செய்த புதிய சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு டப்பிங் படத்தின் டீசர் 25 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

அது ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி.


Kabali Telugu Teaser sets a new record

ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படம் கபாலி என்ற பெயரிலேயே தெலுங்கிலும் வெளியாகிறது. இந்தப் படத்தின் டீசர் கடந்த மே 1-ம் தேதி வெளியானது.


வெளியான 17 நாட்களில் தமிழில் மட்டும் 1 கோடியே 82 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் இது புதிய சாதனை. வேறு எந்தப் படமும் இத்தனை வேகமாக இவ்வளவு பார்வைகளைப் பெற்றதில்லை.


தெலுங்கு


தெலுங்கு டீசரும் அதே மே 1-ம் தேதி மாலை வெளியிடப்பட்டது. இதுவரை இந்த டீசர் 25 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.


சாதனை


தெலுங்கு சினிமாவில் வேறு எந்த டப்பிங் பட டீசருக்கும், ட்ரைலருக்கும் இவ்வளவு அதிகமான பார்வைகள் கிடைத்ததில்லை. அந்த வகையில் கபாலி புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.


பெரிய விலை...


கபாலி தெலுங்குப் படத்தின் உரிமை ரூ 30 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. படத்தை வரும் ஜூலை 1-ம் தேதி வெளியிடுகிறார்கள்.

English summary
The Telugu teaser of Rajinikanth's Kabali movie has set a new high in Telugu film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil