»   »  இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!

இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதெல்லாம் ஒரு படத்தின் வெற்றி முன்பு போல நூறு நாட்கள் ஓடுவதை வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. பத்தே நாட்கள் என்றாலும் போட்ட பணத்தை திரும்ப எடுத்துவிட்டால் போதும். அதுதான் சினிமா வர்த்தகத்தின் இப்போதைய உத்தி.

இந்த உத்தியை முதலில் ஆரம்பித்ததே ஒரு ரஜினி படத்திலிருந்துதான். அந்தப் படம் சிவாஜி த பாஸ்.

Kabali, the lone blockbuster of 2016

இன்றுள்ள பலதரப்பட்ட பொழுதுபோக்குச் சூழலில் ஒரு படம் நூறு நாட்கள் வரை ஒரே தியேட்டரில் ஓடுவது சாத்தியமில்லாத சமாச்சாரம் ஆகிவிட்டது. பெருமைக்காக சில படங்களை ஒற்றைக் காட்சிகளாக ஓட்டி விழா எடுப்பதை சில நடிகர்கள் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள்.

இந்த 2016-ம் ஆண்டு 200-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. இவற்றில் சில படங்கள் நூறு நாட்களைத் தொட்டன. ஆனால் எந்தப் படமும் நூறு நாட்களைத் தாண்டவில்லை.

ரஜினியின் கபாலி மட்டுமே சென்னையில் மூன்று அரங்குகளில் நூறு நாட்களைத் தாண்டியது. மதுரை மணி இம்பாலா அரங்கில் 150 நாட்களைத் தாண்டி ஓடியது.

நூறு நாட்கள் ஓடிய படங்கள் லிஸ்ட்டில் தெறி, இறுதிச் சுற்று, ரஜினி முருகன் போன்றவை இடம்பிடித்துள்ளன.

English summary
Rajinikanth's blockbuster Kabali is the only movie that ran morethan 150 days in the year 2016.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil