»   »  நான் தான் "கபாலி"... கொடிபிடிக்கும் மைசூர் சிவக்குமார்!

நான் தான் "கபாலி"... கொடிபிடிக்கும் மைசூர் சிவக்குமார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் கபாலி என்று சற்று முன்னர்தான் ரஞ்சித் அறிவித்தார். எந்த நேரத்தில் அறிவித்தாரோ பின்னாலேயே சிக்கலும் வந்து நிற்கிறது.

மிக நீண்ட நாட்களாக படத்தின் பெயர் பரிசீலனையில் இருந்தது. காளி மற்றும் கண்ணபிரான் போன்ற பெயர்கள் பரிசீலனையில் அடிபட்டது. கடைசியில் கபாலி என்று முடிவு செய்துள்ளனர்.

3 எழுத்தில் பேர் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினி விரும்பியதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக படத்திற்கு கபாலி என்று பெயர் வைத்து சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் முறையாக அறிவித்தார் ரஞ்சித்.

ஆனால் அதற்குள் அறிமுக நடிகர் ஒருவர் தலைப்பு என்னோடது என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை காணலாம்.

கபாலி

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் கபாலி என்று சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஞ்சித் அறிவித்தார். பெயர் அறிவிக்கப் பட்டவுடன் ரஜினி ரசிகர்கள் #kabali என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி உலக அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர்.

பெயருக்கு சிக்கல்

பெயருக்கு சிக்கல்

மைசூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பெயர் கபாலிதானாம். ரஜினி படத்தின் பெயரை அறிவித்தவுடனே ஏற்கனவே நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்று போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார் சிவக்குமார்.

சில ஆண்டுகளாக தொடரும் சிவக்குமாரின் கபாலி

சில ஆண்டுகளாக தொடரும் சிவக்குமாரின் கபாலி

படத்தில் சிவக்குமாருக்கு ஜோடியாக காவ்யா என்பவர் நடிக்கிறார் (நல்ல வடிவான முகம்!). கடந்த சில ஆண்டுகளாக சிவக்குமார் கபாலியை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறுகின்றனர்..

தவணை முறையில் வளர்க்கிறார்

தவணை முறையில் வளர்க்கிறார்

அவரே தயாரிப்பு என்பதால் பணம் கிடைக்கும்போதெல்லாம் படப்பிடிப்பை நடத்துவாராம். தொண்ணூறு சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் அந்தப்படத்துக்கு கடந்த ஒரு மாதம் முன்புகூட சென்னையில் படப்பிடிப்பு நடந்திருக்கிறதென்கிறார்கள்.

3 வருடங்களுக்கு முன்பு

3 வருடங்களுக்கு முன்பு

2012 ம் ஆண்டில் படத்தின் ஆடியோவையும் வெளியிட்டுள்ளனராம். ஆனால் பாடல்களைத்தான் எங்குமே கேட்க முடியவில்லை.

பெயரை புதுப்பிக்கவில்லை

பெயரை புதுப்பிக்கவில்லை

சிவா பிக்சர்ஸ் என்கிற பெயரில் கில்டில் இந்தப்பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் முறைப்படி அவர் அந்தப் பெயரை புதுப்பிக்கவில்லை என்று சொல்லி அந்தப் பெயரை ரஜினி படத்துக்குக் கொடுத்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.

500 ரூபாய் கட்ட மாட்டேனா?

500 ரூபாய் கட்ட மாட்டேனா?

இது குறித்து அந்த சிவக்குமாரிடம் கேட்டால், நான் பல லட்சங்கள் செலவு செய்து படமெடுத்துக் கொண்டிருக்கிறேன், ஐநூறுரூபாய் கட்டி பெயரை புதுப்பிக்க மாட்டேனா நான் ரினியுவல் செய்யப்போகும்போதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டனர், இப்போது எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை என்று சோகத்துடன் கூறுகிறார்.

படத்துக்கு பேர் வச்சு 10 நிமிஷம் ஆகல அதுக்குள்ள பஞ்சாயத்தா?.. வெளங்கீரும்!

English summary
Rajini's Next Movie Title Kabali, Now Started Some Issue's.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil