»   »  கபாலியை ‘பாட்ஷா’வா பார்த்திருக்கீங்களா.. சும்மா மியூசிக் கேட்டாலே அதிரும் வீடியோ!

கபாலியை ‘பாட்ஷா’வா பார்த்திருக்கீங்களா.. சும்மா மியூசிக் கேட்டாலே அதிரும் வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி பட டிரைலரை வைத்து பாட்ஷா பட மியூசிக்கில் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் ரிலீசாகியுள்ள படம் கபாலி. பலத்த விளம்பரங்கள், எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படம் ரிலீசாகியுள்ளது.

முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்டு புதிய சாதனை படைத்தது.

இப்படத்தில் மலேசிய டான் ஆக நடித்துள்ளார் ரஜினி. ஏற்கனவே இதேபோல் பாட்ஷா படத்திலும் அவர் மிரட்டல் தாதாவாக நடித்திருந்தார்.

எனவே, இதையும் அதையும் ஒப்பிட்டுப் பார்த்த ரசிகர்கள், வித்தியாசமாக கபாலி படக் காட்சிகளுக்கு பாட்ஷா பட இசையைக் கோர்த்து புதிதாக வீடியோ ஒன்றை உருவாக்கினார்கள். கடந்த மாதம் இந்த வீடியோ இணையத்தில் வெளியானது.

தற்போது கபாலி படம் ரிலீசாகியுள்ள நிலையில் மீண்டும் இந்த வீடியோவானது வைரலாகியுள்ளது. இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

English summary
A Video of Kabali trailer in Baasha's music is viral now.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil