»   »  தலைவர் பேர சொல்லும்போதே சும்மா அதிருது ... 'கபாலி' மகிழ்ச்சியில் இயக்குநர் பாண்டிராஜ்!

தலைவர் பேர சொல்லும்போதே சும்மா அதிருது ... 'கபாலி' மகிழ்ச்சியில் இயக்குநர் பாண்டிராஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி ரசிகர்கள் நீண்ட மாதங்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த கபாலி டீசர் இன்று ஒருவழியாக வெளியாகிவிட்டது.

லிங்காவிற்குப்பின் வரும் டீசர், ரஜினி-ரஞ்சித் கூட்டணி போன்ற காரணங்களால் இப்படத்தின் டீசருக்கு இதுவரை இல்லாத ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.


இந்நிலையில் சற்றுமுன் வெளியான டீசர் தங்களைக் கவர்ந்திருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


மேலும் #kabaliteaser, "Kabali Tamil Movie", #magizhchi, #KabaliDa, #Thalaivar, #மகிழ்ச்சி போன்ற 5 ஹெஷ்டேக்குகளை உருவாக்கி தேசியளவில் ட்ரெண்டடிக்க வைத்துள்ளனர்.


இதனால் கபாலி டீசர் தற்போது தேசியளவில் கவனம் பெற்றுள்ளது. ரசிகர்கள் கபாலி டீசர் குறித்து என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.


தலைவர்

தலைவர் பேர சொல்லும்போதே சும்மா அதிருது என்று தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.


சின்ன பசங்க

சின்ன பசங்க ஓரமா போங்க என்று கூறியிருக்கிறார் பிரவீன் ராஜ்.


நெருப்பு-மகிழ்ச்சி

எதிரிகளுக்கு நெருப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் ரோஹித்.


கபாலிடா

மரு வச்சுக்கிட்டு குனிஞ்சு வணக்கம் சொல்வேன்னு நெனைச்சியா? கபாலிடா என்று ரஜினி கூறும் வசனத்தை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார் சஞ்சீவ்குமார்.


வயசானாலும்

வயசானாலும் ரஜினியின் ஸ்டைல் இன்னும் மாறவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார் அருண்.


அண்ணாமலை

அண்ணாமலை, பாட்ஷா, எந்திரன் பாணியில் கபாலியும் கண்டிப்பாக மாஸ்டர் பீஸ் தான் என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார் வசந்த்.


English summary
Fans Much Awaited Kabali Teaser Released Today. Now #kabaliteaser Hashtag Trending in Nationwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil