Don't Miss!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- News
திருப்பத்தூர் அருகே இலவச வேஷ்டி சேலைக்கான டோக்கன் வினியோகம்..நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சோகம்
- Lifestyle
உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற வேண்டுமா? அப்ப இத தினமும் நைட் டைம்-ல குடிங்க போதும்..!
- Technology
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தூரிகை கபிலன் எடுத்த விபரீத முடிவு.. முதல் கட்ட விசாரணையில் வெளியான திடுக் தகவல்
சென்னை: பிரபல சினிமா பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கபிலன் எடுத்த விபரீத முடிவு அவரது குடும்பத்தினைரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Recommended Video
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூரிகை கபிலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ் திரையுலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தூரிகையின் உடலை கைப்பற்றிய போலீசார், சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்துள்ளனர். இந்நிலையில், முதல் கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ஆர்யாவுக்கு
பதிலாக
கார்த்தி?:
7
ஆண்டுகளுக்குப்
பிறகு
ரீ
என்ட்ரி
கொடுக்கும்
சூது
கவ்வும்
இயக்குநர்

சோகத்தில் கபிலன்
சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தில் படத்தில் இடம்பெற்ற ‘உன் சமையல் அறையில்' பாடலை எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாடலாசிரியர் கபிலன். சென்னை பட்டினம், சகலகலா வல்லவனே, ஆல் தோட்ட பூபதி நானடா, மச்சான் பேரு மதுர, மெர்சலாயிட்டேன், என்னோடு நீ இருந்தால், செல்லாக்குட்டியே உள்ளிட்ட ஏகப்பட்ட ஹிட் பாடல்களை பாடி தமிழ் ரசிகர்களை சந்தோஷக் கடலில் ஆழ்த்திய கவிஞர் கபிலன் இன்று தனது மகளின் அகால மரணத்தால் பெருந்துயரில் ஆழ்ந்துள்ளார்.

கவிதையான பெயர்
தனது செல்ல மகளுக்கு தூரிகை என கவிதையாக பெயரை சூட்டி வளர்த்து வந்து போல்டான பெண்ணாக இந்த சமூகத்தில் உலவ விட்டு இருந்தார். பெண்களுக்கான இதழை நடத்தும் அளவுக்கு துணிச்சலான பெண்ணான தூரிகை இப்படியொரு மோசமான முடிவை எடுப்பார் என யாருமே நினைத்து பார்க்கவில்லை. இந்நிலையில், அவர் தற்கொலைக்கு இதுதான் காரணமா? என்கிற கேள்வி முதற்கட்ட விசாரணையில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதுதான் காரணமா
தூரிகையை அவரது பெற்றோர் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியது தான் அவரது தற்கொலைக்கு காரணமா என்கிற கேள்வி போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. இது தொடர்பாக தூரிகையின் பெற்றோர்களிடத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் பிரச்சனையா
பாடலாசிரியர் கபிலனின் மகள் வேறு யாரையாவது காதலித்து வந்தாரா? காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில், தான் இப்படியொரு முடிவை எடுத்து விட்டாரா என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேசி, போராடி தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சனைகளுக்கு எல்லாம் ஏன் தான் இந்த காலத்து இளைஞர்கள் உடனடியாக தற்கொலை முடிவை கையில் எடுக்கின்றனரோ என்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது.

தற்கொலை தீர்வல்ல
எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எல்லாம் பதிவிட்டு மற்ற இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வந்த தூரிகை கபிலன் இப்படியொரு முடிவை எடுக்கும் அளவுக்கு அப்படி அவருக்கு என்ன பிரச்சனை என்கிற ரீதியிலும் விசாரணை முடுக்கப்பட்டுள்ளது.