»   »  70வது பர்த்டே ஸ்பெஷல்... நீண்டநாள் காதலியை 4வது மனைவியாக்கினார் இந்தி நடிகர் கபீர் பெடி

70வது பர்த்டே ஸ்பெஷல்... நீண்டநாள் காதலியை 4வது மனைவியாக்கினார் இந்தி நடிகர் கபீர் பெடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் கபீர் பெடி தனது 70வது பிறந்த தினத்தன்று தனது நீண்டநாள் காதலியான பர்வீன் துசாஞ்சை திருமணம் செய்து கொண்டார். இது அவருக்கு 4வது திருமணம் ஆகும்.

நடிகர் கபீர் பெடி கடந்த சனிக்கிழமையன்று தனது 70வது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் இந்தி திரையுலகினர் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக, பிறந்த நாள் கொண்டாடிய அதே மேடையில் தனது நீண்ட நாள் காதலியான பர்வீன் துசாஞ்சிற்கும் அவர் தாலி கட்டினார்.

திருமணம்...

திருமணம்...

கபீர் பெடியும், பர்வீன் துசாஞ்சும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் செய்து கொள்ளாமல், கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்தக் காதல் தம்பதிக்கு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

4வது திருமணம்...

4வது திருமணம்...

கபீர் பெடிக்கு இது 4-வது திருமணம் ஆகும். ஏற்கனவே அவர் 3 பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் ஆவார்.

ஒடிசி நடன கலைஞர்...

ஒடிசி நடன கலைஞர்...

முதலாவதாக ஒடிசி நடன கலைஞரான புரோத்திமாவை திருமணம் செய்தார் கபீர். பின்னர் வேறுபாடு காரணமாக இருவரும் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்தனர்.இத்தம்பதிக்கு பூஜா என்ற மகளும், சித்தார்த் என்ற மகனும் உள்ளனர்.

ஹலோ கோன் ஹை...

ஹலோ கோன் ஹை...

அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் பிறந்த ஆடை வடிவமைப்பாளர் சூசன் ஹம்ப்ரீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கபீர். இந்த தம்பதிக்கு ஆதம் என்ற மகன் இருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான ‘ஹலோ, கோன் ஹை' என்ற படத்தில் அறிமுகமானார்.

3வது திருமணம்...

3வது திருமணம்...

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சூசனையும் பிரிந்த கபீர், டி.வி. மற்றும் ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளரான நிக்கி பெடியை மூன்றாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் ஏதும் இல்லை.

லிவிங் டுகெதர்...

கடந்த 2005-ம் ஆண்டு நிக்கியை விவாகரத்து செய்த கபீர், அதனைத் தொடர்ந்து பர்வீன் துசாஞ்சுடன் திருமணம் செய்யாமல் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், தற்போது இந்தக் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

மகள் எதிர்ப்பு...

மகள் எதிர்ப்பு...

கபீரின் இந்த திருமணத்துக்கு அவரது முதல் மனைவி புரோத்திமா மூலம் பிறந்த மகள் பூஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘ஒவ்வொரு விசித்திர கதையிலும் ஒரு பொல்லாத சூனியக்காரியோ அல்லது தீய வளர்ப்பு தாயோ இருப்பார். அது எனக்கும் இப்போது வந்திருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
On his 70th birthday, actor Kabir Bedi surprised his guests by tying the knot with his long-time partner Parveen Dusanj, 42.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil