»   »  என் 4வது மனைவி சூனியக்காரியா.. என்ன மகளே இப்படிச் சொல்லி விட்டாய்.. கபீர் பேடி வேதனை!

என் 4வது மனைவி சூனியக்காரியா.. என்ன மகளே இப்படிச் சொல்லி விட்டாய்.. கபீர் பேடி வேதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது நான்காவது மனைவியை சூன்யக்காரி என விமர்சித்த தனது மகளை பிரபல பாலிவுட் நடிகர் கபீர் பேடி கண்டித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான கபீர் பேடி கடந்த வாரம் தனது 70வது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்தி திரையுலகினர் திரளாக கலந்து கொண்ட இந்த பிறந்தநாள் விழாவின் போதே, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக தனது நீண்ட நாள் காதலியான பர்வீன் துசாஞ்சிற்கும் அவர் தாலி கட்டினார்.

இந்தத் திருமணத்தை கபீரின் மகளான நடிகை பூஜா பேடி தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

சூனியக்காரி...

சூனியக்காரி...

கபீருக்கும், அவரது முதல் மனைவி புரோத்திமாவிற்கும் பிறந்த மகளான பூஜா, தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஒவ்வொரு விசித்திர கதையிலும் ஒரு பொல்லாத சூனியக்காரியோ அல்லது தீய வளர்ப்பு தாயோ இருப்பார். அது எனக்கும் இப்போது வந்திருக்கிறது' எனத் தெரிவித்திருந்தார்.

பதிலடி...

பதிலடி...

பூஜாவின் இந்த விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக கபீர் தனது டிவிட்டர் பக்கத்திலேயே பதிலடி கொடுத்துள்ளார்.

மன்னிப்பு கிடையாது...

மன்னிப்பு கிடையாது...

அதில் அவர், ''பர்வீன் விஷயத்தில், பூஜா, விஷத்தை கக்கியுள்ளார். இதை ஏற்க முடியாது. இந்த ஒழுக்கமற்ற செயலுக்கு மன்னிப்பு கிடையாது'' எனப் பதிவு செய்துள்ளார்.

இளையவர்...

இளையவர்...

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், பூஜாபேடியை விட, தற்போது கபீர் பேடியின் நான்காவது மனைவியாகியுள்ள பர்வீன் வயதில் இளையவர்.

4வது திருமணம்...

4வது திருமணம்...

திருமணத்திற்கு முன்னதாக கபீர் பேடியும், பர்வீன் துசாஞ்சும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் செய்து கொள்ளாமல், கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். கபீர் பேடி ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் ஆவார்.

English summary
Kabir Bedi tied the knot with long time girlfriend Parveen Dusanj recently on his 70th birthday. But things have taken a bit ugly turn between Kabir and his daughter Pooja Bedi. Kabir Bedi took to Twitter to express his disappointment with daughter Pooja over her 'venomous comments'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil